முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுப்பதே தங்களது குறிக்கோள் -அமைச்சர் எஸ்.பி வேலுமணி


அ.தி.மு.க இரு அணிகள் தரப்பில் குழுக்கள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் இருந்து திரும்பியவுடன் கட்சி இணைப்பு தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கை தொடரும் என நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்க துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்தார்.

இதனை தொடந்து, கூட்ட அரங்கில் இருந்து வெளியே வந்த அமைச்சர் எஸ்.பி வேலுமணியிடம், அ.தி.மு.க இரு அணிகள் இணைப்பு தொடர்பாக கேள்வி எழுப்பபட்டது. அப்போது பேசிய அமைச்சர் எஸ்.பி வேலுமணி, பத்திரிகைகளில் அமைச்சர்கள் பேட்டி அளிப்பதால் குழப்பம் ஏற்படுகின்றது என்பதால், அனுமதி இல்லாமல் பேட்டி கொடுக்க வேண்டாம் என முதல்வர் அறிவுறுத்தி இருப்பதாகவும் வேலுமணி தெரிவித்தார். 

மேலும், இரு தரப்பிலும் குழுக்கள் அமைக்கப்பட்டு இணைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது எனவும், முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுக்க வேண்டும் என்பதே தங்களது குறிக்கோள் எனவும் தெரிவித்தார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் இருந்து வந்தவுடன் இரு அணிகள் தரப்பில் கட்சி இணைப்பு தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், இரு அணிகளும் ஒற்றுமையாக இருந்து செயல்பட இருப்பதாகவும் சின்னத்தை மீட்பதற்கான நடவடிக்கை தொடரும் எனவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...