KMCH கல்லீரல் தொடர் பயிற்சி – 3 வைரஸ் ஹெப்பாடிட்டீஸ்… எளிதாக்குவோம்

KMCH கல்லீரல் மையத்தில் உள்ள மருத்துவர்கள் கல்லீரல் சம்மந்தப்பட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதிலும் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதிலும் கவனம் செலுத்துவதோடு மட்டுமல்லாமல் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள மற்ற பொது மருத்துவர்களுக்கும் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கும் பயிலரங்குகள் நடத்துவதிலும் தங்களை நெருக்கமாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.



இப்படி ஒரு முயற்சியைதான் ஒரு வருடம் முன்பு KMCH-ல் முன்வைத்து, தொடர்ந்து KMCH கல்லீரல் தொடர் என்னும் திட்டம் நடத்தப்படுகிறது. இதன் மூலம் கல்லீரல் நோய்களுக்கான சிகிச்சைகளை பற்றிய விசேஷ பயிற்சி வகுப்புகளை பொது மருத்துவர்களுக்கும் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கும் நடத்துவது என்று KMCH கல்லீரல் மையம் முடிவு செய்தது. அதன் தொடர்ச்சியாக மூன்றாவது பயிற்சி வகுப்பை 22/04/2017 அன்று நடந்தது.

இம் முறை வைரஸ் கிருமியால் எற்படும் ஈரல் நோய்கள் சம்மந்தப்பட்ட கருத்தரங்கம் நடைபெற்றது . இந்தியாவில் ஏறக்குறைய  5 கோடி மக்கள் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். எய்ட்ஸ், டிபி,மலேரியா போன்ற நோய்களை விடஅதிகமாக மக்களை தாக்குகின்றது. இந்த முக்கியமான செய்தி பொது மக்கள் மற்றும் மருத்துவர்கள் அறியாமல் இருக்கிறார்கள் .இந்த விழிப்புணர்வை எற்படுத்த இந்த கருத்தரங்கம் மிகவும் உறுதுணையாக இருக்கும் என டாக்டர் . விவேகானந்தன் தலைவர் - KMCH கல்லீரல் துறை  நம்புகிறார்.இந்த கருத்தரங்கத்தில் பொது மருத்துவர்களும், அறுவைசிகிச்சை நிபுணர்களும் ,இரைப்பை மருத்துவ குழுவினரும் கலந்து கொண்டார்கள், இதன் சிறப்பு விருந்தினர்களாக தென் இந்தியாவின் இரைப்பை மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்கள்.

கே.எம்.சி.எச் டைரக்டர் டாக்டர். அருண் பழனிச்சாமி கூறியதாவது. எந்த வைரஸ் கிருமியை நாம் தவிர்க்க முடியும், ஹெப்பாடிட்டீஸ் எ & இ வைரஸ்கள் அசுத்தமான உணவுகளில் இருந்து வருகிறது , மற்றும் ஹெப்பாடிட்டீஸ் பி & சி வைரஸ்கள் உடல் திரவங்கள் மூலம் பரவுகிறது. நம் வாழ்வு முறையில் சுத்தமும் சுகாதாரத்தையும் கடைபிடித்தால்  இக் கொடிய நோய்களில் இருந்து தவிர்க்கலாம். 

இதற்கு தடுப்பூசிகளும் உள்ளது. வரும் முன் காப்போம் என்பதனை மனதில் கொண்டு கே.எம்.சி.எச் பல விழிப்புணர்வு மருத்துவ முகாம்களை பல்வேறு இடங்களில் நடத்திவருகிறது.

இந்த கருதரங்கத்தை நடத்தியதற்கு  கே.எம்.சி.எச், டீன் டாக்டர் .V.குமரன் அவர்களும் மற்றும்  கே.எம்.சி.எச்,மருத்துவ இயக்குனர்  டாக்டர்.A.N.முருகன் அவர்களும் கல்லீரல் குழுவை மிக சிறப்பாக பாராட்டி ஊக்குவித்தார்கள்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...