உலக புத்தக தினத்தை முன்னிட்டு ஆர்.எஸ்.புரம் மாவட்ட மைய நூலகத்தில் சிறப்பு புத்த கண்காட்சி நடைபெற்றது.


உலக புத்தக தினத்தை முன்னிட்டு தமிழ் நாடு அரசு பொது நூலகத்துறை, நியூ செஞ்சுரி புத்தகநிறுவனம் மற்றும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ஆகிய அமைப்புகள் இணைந்து ஆர்.எஸ்.புரம் மாவட்ட மைய நூலகத்தில் சிறப்பு புத்த கண்காட்சியை நடத்தியது.

நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகளை சிறையில் கழித்தார். 27 ஆண்டுகளை எப்படி சிறையில் கழித்தீர்கள் என்று கேட்டதற்கு. புத்தகங்கள் வாசித்தேன் என்றார். அவர் சிறைக்குள் இருந்தபோதுதான் காந்திஜி எழுதிய சத்திய சோதனையை படித்து முடித்தார். இந்திய சுதந்திரத்திற்காக போராடி தூக்கு மேடை ஏரிய பகத்சிங் லாகூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். 

அவர் தூக்கிலிடப் படுவதற்கு சற்று முன்னர் காவலர்கள் அவரை தூக்கு மேடைக்கு அழைத்து செல்ல வந்தார்கள். அவர் லெனின் எழுதிய அரசும் புயரட்சியும் என்ற நூலை படித்துக் கொண்டு இருந்தார். அழைத்து செல்ல வந்த காவலர்களிடம் சற்றுப் பொறுங்கள் இந்த நூலில் இன்னும் நான்கைந்து பக்கங்கள்தான் இருக்கிறது. அதை படித்து முடித்துவிட்டு வருகிறேன் என்று கூறினார். புத்தகங்கள் எவ்வளவு சிறப்புக்கு உரியது என்பதற்கு பகத்சிங் ஒருவரே போதும். அவர் அந்த சின்ன வயதிலேயே நான் ஏன் நாத்திகனானேன் என்ற சிறு நூலை எழுதினார்.ஆங்கில ஆரசு ஆடிப்போனது.இது போல் பல்வேறு தகவல்களை தெரிந்து கொள்ள புத்தக வாசிப்பு அவசியம் என கவிஞர் சிதம்பரநாதன் பேசினார். 

வரும் 29ம் தேதிவரை நடைபெறும் இந்த கண்காட்சியிலும், நேரு விளையாட்டு அரங்கத்தில் உள்ள நியு செஞ்சுரி புத்த நிறுவனத்தில் 10 % முதல் 50% சதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.  

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...