மார்டின் ஹோமியோபதி மருத்துவக்கல்லூரி நிர்வாகத்தினர் மாணவர்களை தரக்குறைவாக பேசுவதாக குற்றச்சாட்டு, மாணவர்கள் தொடர் போராட்டம்.


கோவை கவுண்டம்பாளையத்தில் செயல்பட்டு வரும் மார்ட்டின் ஹோமியோபதி மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 300 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் கல்லூரி நிர்வாகம் மாணவிகளை தரக்குறைவாக பேசுவதாகவும், மாணவர்களை மோசமாக நடத்துவதாகவும் கூறி, மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டது.

இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், செய்தி ஊடகங்களை சந்திக்கக்கூடாது எனவும், கல்லூரி முன்பாக போராட்டத்தில் ஈடுபடக்கூடாது எனவும் கல்லூரி நிர்வாகத்தினர் மிரட்டல் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. 

இதனை மீறி கல்லூரி நுழைவுவாயில் கதவை திறந்து, வாயில் முன்பாக போராட்டம் நடத்த வந்த மாணவர்களை கல்லூரி நிர்வாகத்தினர் தடுத்து நிறுத்தியதால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

இதையடுத்து கல்லூரியை விட்டு வெளியேற மறுத்து மாணவர்கள் வாயில் முன்பாக அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் போது மாணவர்களை தரக்குறைவாக பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், அதுவரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...