விவசாயிகளுக்கு ஆதரவாக ஏப்ரல் 25ம் தேதி தமிழகம் முழுவதும் ஓட்டல்கள் அடைக்கப்படும்- தமிழ்நாடு ஓட்டல்கள் சங்க தலைவர் வெங்கிடசுப்பு

தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக வரும் ஏப்ரல் 25ம் தேதியன்று தமிழகம் முழுவதும் ஓட்டல்கள் அடைக்கப்படும் என தமிழ்நாடு ஓட்டல்கள் சங்க தலைவர் வெங்கிடசுப்பு தெரிவித்துள்ளார். கோவையில் தமிழ்நாடு ஓட்டல் சங்க தலைவர் வெங்கிடசுப்பு செய்தியாளர்கள் சந்திப்பின் போது இதுகுறித்து கூறியதாவது:-

தமிழகத்தில் வரும் 25-ம் தேதி விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெறும் கதவடைப்பு போராட்டத்தில் தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம் பங்கேற்க உள்ளது. அன்றைய தினம் தமிழகம் முழுவதும் உள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உணவகங்களும் மூடப்படும்.

மேலும், அன்றையதினம் தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் சார்பில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து அடையாளமாக போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர். 

உணவு பொருட்கள் அனைத்து இடங்களிலும் ஒரே விலையில் கிடைக்க வாய்ப்பில்லை. இருக்கும் இடம், வாடகை, ஊதியம் போன்றவற்றின் அடிப்படையில் உணவு பொருட்களின் விலை மாறும். ஆனால் அனைத்து இடங்களிலும் தரமான உணவு வழங்கப்படுகிறது. உணவு பாதுகாப்பு சட்டத்தில் ஒரு சில விதிகளை தவிர, சட்டம் வரவேற்கும் படியாகவே உள்ளது" என தமிழ்நாடு ஓட்டல்கள் சங்க தலைவர் வெங்கிடசுப்பு தெரிவித்தார்.

இதனிடையே விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தில்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக கோவை உக்கடம் பணிமனை முன்பாக போக்குவரத்துக் கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, விவசாயிகளின் பிரச்சனைக்கு தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் தவறி விட்டன. விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...