வழக்கறிஞர்களுக்கான நடத்தை விதிமுறைகளை கண்டித்து கோவையில் சட்ட ஆணையத்தின் பரிந்துரை நகலை எரித்து வழக்கறிஞர்கள் போராட்டம்

வழக்கறிஞர்களுக்கான நடத்தை விதி முறைகளில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக சட்ட ஆணையம் வழக்கறிஞர்களுக்கான நடத்தை விதிமுறைகளில் மாற்றம் செய்து பரிந்துரை நகலை வழங்கியுள்ளது.

இந்த விதிமுறைகள் வழகறிஞர்களின் உரிமைகளை பறிப்பதாக அமைந்துள்ளதாகக் கூறி இன்று கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், நீதிமன்ற பணிகள் முடக்கியுள்ளன.

இந்நிலையில், கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பாக இன்று பிற்பகல் வழக்கறிஞர்கள் சட்ட ஆணையத்தின் நடத்தை விதிமுறைகளில் மாற்றம் செய்து பரிந்துரை செய்துள்ள நகலை தீ வைத்து எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது சட்ட ஆணையத்தின் பரிந்துரைகளானது வழக்கறிஞர்கள் தொழில் செய்ய முடியாத படி அபராதம், சிறை தண்டனை போன்றவை கிடைக்கும் அளவிற்கு திருத்தங்கள் செய்யப்பட்டு இருப்பதாகவும், இந்த திருத்தங்கள் திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

மேலும் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வழகறிஞர்கள் சார்பில் அடுத்த மாதம் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் தில்லியில் போராட்டம் நடத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...