நாளை முதல் கோடை விடுமுறை ஆரம்பம்- மாணவர்கள் உற்சாகம்


தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. முன்னதாக தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஏப்ரல் 30-ஆம் தேதிக்கு பிறகுதான் கோடை விடுமுறை விடுவதாக திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் மாநிலம் முழுவதும் பல மாவட்டங்களில் வெப்ப நிலை அதிகரித்து காணப்படுவதாலும், அனல் காற்று வீசுவதாலும் முன்கூட்டியே ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது.



இந்நிலையில், முதலில் ஆரம்ப பள்ளிகளுக்கு வரும் 25 முதல் 29-ஆம் தேதிவரை தேர்வுகள் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது அனைத்து பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் இன்றுடன் நிறைவு பெற்றது.

எனவே, பள்ளி மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை தொடங்கவுள்ளதால் இன்று இறுதித் தேர்வு எழுதிவிட்டு மாணவர்கள் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...