ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் சார்பில் அரசுப் பள்ளியில் புதிய கழிப்பறை கட்டிடம் திறப்பு


ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் ஷேன் டியகோ டௌவுன்டவுன் பிரேக்பாஸ்ட், யுஎஸ்ஏ சார்பில் சுவட்ச் பாரத் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளுக்கு கழிப்பறை வசதி கட்டப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று கோவை, அசோகபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளயில் கழிப்பறை கட்டப்பட்டு அதனை கோவை ரோட்டரி கிளப் மாவட்ட ஆளுநர் பிரகாஷ் சந்திரன் திறந்து வைத்தார்.

இது குறித்து ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் செயலாளர் ராம்குமார் கூறுகையில்; உலகளாவிய மானியத்தின் கீழ் அரசு பள்ளிகளுக்கு கழிப்பறை திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதற்கு ரோட்டரி இன்டெர்நேஷ்னல் தலைமையகம் மூலம் 50 சதவீதம் நிதி வழங்கப்பட்டது. இதுவரை ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் சார்பில் 10 அரசுப் பள்ளிகளுக்கு 65 லட்சம் செலவில் கழிப்பறை வசதி கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. கழிப்பறை வசதிக்கு முழுமையாக தண்ணீர் வசதி போன்றவை செய்து கொடுக்கப்பட்டுள்ளது.



இதனை பராமரிப்பு மற்றும் மேற்பார்வையிட ஒவ்வொரு மாதமும் ரோட்டரி குழு உறுப்பினர்கள் ஆய்வு செய்ய ஏற்பாடு செய்யப்படவுள்ளது. அதன்பிறகு பி.எஸ்.ஜி மருத்துவமனையின் மருத்துவர்கள் இந்த பள்ளி கூடங்களுக்கும் சென்று மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு எடுக்க முடுவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இதுபோன்ற திட்டங்களுக்கு ரோட்டரி இன்டெர்நேஷ்னல் தலைமையகம் உதவி வருகிறது. அவர்களுக்கு இந்த திட்டத்தை பற்றிய தகவல் 6 மாதத்திற்கு ஒருமுறை ரிப்போர்ட் அனுப்பும் வகையில் 5 ஆண்டுகளுக்கு இந்த கழிப்பறை வசதிகள் பராமரிக்கப்பட்டு வரும். இதுபோன்ற திட்டங்களுக்கு பள்ளிகளில் இருந்தும் மிகுந்த ஆதரவு கிடைக்கிறது என்றார்.



இதில், ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் தலைவர் குரூப்தீப் சிங், உதவி ஆளுநர் மாரப்பன், ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் உறுப்பினர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...