போத்தனூர் அருகே பூட்டிய வீட்டில் நகை மற்றும் கார் கொள்ளை

கோவை மாவட்டம், போத்தனூர் கருப்பராயப் கோவில் வீதியை சேர்ந்தவர் ஷா ஆலம் (43). இவர் கடந்த 16ம் தேதி தன் குடும்பத்தினருடன் சென்னை சென்றுவிட்டு நேற்று கோவை திரும்பியுள்ளார். 

அப்போது, வீட்டின் முன்புற கதவு உடைக்கபட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஷா ஆலம், வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 13 பவுன் தங்க நகை, 30,000 ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் 60 கிராம் வெள்ளி பொருட்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மேலும், வீட்டின் முன்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சாண்ட்ரோ காரும் திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து போத்தனூர் காவல் நிலையத்தில் ஷா ஆலம் புகார் அளித்ததைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மோப்ப நாய் உதவிடன் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், தடயவியல் நிபுணர்களும் கதவு மற்றும் பீரோவில் உள்ள கைரேகை குறித்து ஆய்வு நடத்தினர். தொடர்ந்து, இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்கு பதிவுசெய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...