கோகுலம் சிட்பண்ட்ஸ் நிறுவனத்தின் 87 கிளைகளில் வருமான வரித்துறையினர் சோதனை


வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக பிரபல சிட் பண்ட் நிறுவனமான கோகுலம் சிட்பண்ட்ஸ் நிறுவனத்தின் 87 கிளைகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கோகுலம் சிட்பண்ட்ஸ் நிறுவனம் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளர்களிடம் இருந்து முதலீடுகளை பெற்று அதற்கு வட்டி வழங்கி செயல்பட்டு வருகிறது.

இந்நிறுவனத்திற்கு உட்பட்ட பல்வேறு கிளைகள் தமிழகம், கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்களில் செயல்பட்டுவருகிறது. 

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அந்நிறுவனம் வருமானத்திற்கு உரிய முறையில் கணக்கு காட்டாமல் வரி ஏய்ப்பு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்த வருமான வரித்துறையினர் இன்று அதிரடியாக அந்நிறுவனத்தின் 87 கிளைகளிலும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவையில் நூறு அடி சாலையில் உள்ள அந்நிறுவனத்தின் தலைமையகம் மற்றும் கணபதியில் உள்ள அந்நிறுவன கிளை உள்ளிட்ட 7 இடங்களில் 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவையில் பிரபல சிட்பண்ட் நிறுவனத்தில் நடைபெற்று வரும் இந்த சோதனை அதன் வாடிக்கையாளர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...