மருத்துவமனைகள் மற்றும் தனியார் வணிக வளாகங்கள் கட்டாய தலைக் கவசம் அணியும் வளாகங்களாக வேண்டும் : காவல்துறை வேண்டுகோள்

தலைகவசம் அணிந்து வாகனம் ஓட்டுவது கட்டாயமாக உள்ள நிலையில், இருசக்கர வாகனங்களில் தலைகவசம் அணியாமல் பணிப்பவர்களுக்கு அபாரதம் விதித்து வருகிறது காவல் துறை. இந்த நிலையில், கோவையில் உள்ள தனியார் வளாகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளுக்குள் நுழையவும் தலை கவசம் அவசியம் என்று அறிவிக்க வேண்டும் என கோவை மாநகர காவல் துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கோவை மாநகர காவல்துறை சார்பில் வெளியான செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது :- 

கோவை மாநகரில் சாலை விபத்துகளை குறைக்க காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக கோவையில் உள்ள தனியார் குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள் 'கட்டாய தலை கவசம் அணியும் வளாகம்' என்று அறிவிக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இதனால் சாலை விபத்துகள் வெகுவாக குறையும். 

தற்போது, கோவையில் சில பள்ளி, கல்லூரிகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் இத்திட்டத்தை சரியாக கடைபிடித்து வருகின்றனர். இத்திட்டத்தை, கோவையில் உள்ள மற்ற கல்லூரிகள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் மருத்துவமனைகளும் நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

சாலை விபத்துக்களை தவிற்க , விதிகளை பின்பற்றாமல் வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தீவிர வாகன தனிக்கை நடைபெற உள்ளது. எனவே வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மதித்து காவல்துறைக்கு ஒத்துழைப்பு கொடுக்குமாறு கோவை மாநகர காவல்துறை கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு அந்த செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...