புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியர் அலுவலகத்தில் குட்டிகரணம் போட்டு பொதுமக்கள் போராட்டம்

அன்னூர் வட்டத்திற்குட்பட்ட கள்ளிப்பாளையம் ஊராட்சியில் புதிதாக மதுபான கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள், இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒப்பாரி போராட்டம் நடத்தினர்.



அப்போராட்டத்தின் போது, தங்கள் ஊருக்குள் மதுபானக் கடை அமைந்தால் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். எனவே, கோவை மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிம் மனு அளித்தனர்.



அதே போல, இந்துமக்கள் கட்சியின் சார்பாக பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் புதிதாக மதுபான கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குட்டிகாரணம் போட்டு அக்கட்சியினர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கரவழி, மாதப்பூர், கணியூர் சாலை மற்றும் ஊஞ்சப்பாளையம் சாலையில் புதிதாக மதுபான கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கைகளில் மதுபான கடை வேண்டாம் என்ற பதாகைகளை ஏந்தி, மதுபான கடைக்கு எதிராக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் கோஷங்களை எழுப்பினர்.

இப்பகுதியில் பள்ளி, கல்லூரிகள் இருப்பதாலும், பெண்கள் அதிகமாக பயன்படுத்தும் குடிநீர் தொட்டி மற்றும் கோவில் அருகில் புதிதாக மதுபான கடை அமையவிருப்பதாகவும், மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொண்டு அப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைப்பதை தடுக்க வேண்டும் என அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...