வால்பாறை தேயிலை தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.450 கூலி வழங்க வலியுறுத்தி ஏஐடியுசி தொழிற்சங்கத்தினர் உண்ணாவிரதம்


வால்பாறையில் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தினக் கூலியாக நாளொன்றுக்கு ரூ.450 வீதம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் சார்பாக வால்பாறை பழைய பேருந்து நிலையம் அருகில் 50-க்கும் மேற்பட்டவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வால்பாறை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் தலைமை வகித்து உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், கேரளாவில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 300 ரூபாயிக்கும் மேல் தினக்கூலியாக வழங்கப்பட்டு வருகிறது. வால்பாறை பகுதி தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு மிகவும் குறைவாகவே வழங்கப்படுகிறது. 



எனவே, அரசுக்கும், தேயிலை தோட்ட நிர்வாகத்தினரும் வால்பாறை தேயிலை தோட்ட தொழிலார்களுக்கு நாளொன்றுக்கு 450 ரூபாய் வீதம் வழங்க வேண்டும்' என்று உரையாற்றினார்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கௌரவ தலைவர் கோவிந்தராஜன், பொதுச்செயலாளர் மோகன், துணைத்தலைவர்கள் மாணிக்கம், சின்னப்பன், ஜீவனந்தம், பாலகிருஷ்ணன், அண்ணாதுரை ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தில் சங்க பொதுச்செயலாளர் மோகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாணிக்கம், ஆனைமலையை சேர்ந்த சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

வால்பாறை காவல் நிலையத்தில் ஏஐடியுசி, பாஜக-வினர் புகார்

வால்பாறை ஏஐடியுசி-வினர் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டத்தின் போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் பேசுகையில் அத்துமீறி கூட்டத்தில் நுழைந்த பாஜக-வினர் மைக்குகளை பிடுங்கி உடைத்து ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிபிஐஎம் மற்றும் ஏஐடியுசி-வினர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதனிடையே, ஏஐடியுசி தொழிற்சங்கத்தினர் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டக் கூட்டத்தின் போது பேசிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் தனது உரையில், பிரதமர் மோடியை தவறாக பேசியதாக வால்பாறை பாஜக மண்டல பொதுச்செயலாளர் கார்த்திக் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்தார்.

அம்மனுவில், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை தேச விரோதிகள் என்று மிகவும் கீழ் தரமாக பேசிய சிபிஐஎம் வால்பாறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ஏஐடியுசி தொழிற்சங்க தலைவர் ஆறுமுகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...