கோவை குறிச்சி குளத்தில் தூர்வாரும் பணியில் ஈடுபட்ட சிறப்பு காவல் படையினர்

கோவை மாவட்டம், கோவைப்புதூர் பகுதியிலுள்ள தமிழ்நாடு 4-வது சிறப்பு காவல் படையினர் இன்று காலை குறிச்சி குளத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

பருவமழை பொய்த்ததாலும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததாலும் கோவை குறிச்சி குளம் தற்போது வறண்ட நிலையில் காணப்படுகிறது.



வரும் பருவமழை காலத்திலாவது இக்குளத்தில் நீர்வரத்து அதிகரிக்கும் நோக்கத்தில் இன்று காலை 6 முதல் 10 மணி வரை குளத்தை சுத்தப்படுத்தும் பணியானது 4 வது சிறப்பு காவல் படை கண்காணிப்பாளர் சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது.

சுமார் 120 காவலர்கள் குறிச்சி குளத்தின் உட்பகுதியில் உள்ள கழிவுகள், பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றை அகற்றினர்.

மேலும், குளத்தின் உட்பகுதியில் இருந்த மேடான பகுதிகளை இயந்திரம் மூலம் சமப்படுத்தியும், குளத்திற்கு தண்ணீர் வரும் பாதையில் உள்ள உடைப்புகள் மற்றும் புதர்கள் போன்றவற்றை அகற்றியும், குளத்தின் கரை பகுதியை வலுப்படுத்தியும் குறிச்சி குளத்தை சீரமைத்தனர்.

தொடர்ந்து, குறிச்சி குளம் மீட்பு குழுவின் நிர்வாகிகள் சாமிநாதன் உள்ளிட்டோர் சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினருக்கு ஆலோசனைகளை வழங்கினர்.

இதே போன்று உக்கடம் ஆத்துப்பாலம் பகுதியில் குளங்கள் பாதுகாப்பு இயக்கத்தினர் அப்பகுதியில் புதர்மண்டிக் கிடந்த வாய்க்கால்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...