வறட்சியால் கோவையை சேர்ந்த விவசாயி தற்கொலை!


கோவை மாவட்டம் சூலூரை அடுத்த பச்சே கவுண்டன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம்(75). 

அதே பகுதியில் ஆறுமுகத்திற்கு சொந்தமாக 2 ஏக்கரில் தென்னந்தோப்பு உள்ளது. தோப்பில் இருந்த கிணற்றில் தண்ணீர் வற்றிப்போனது. விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாததால் தனது தோப்பில் இரண்டு இடங்களில் போர்வெல் அமைக்க முடிவு செய்தார். 

தொடர்ந்து, சுமார் 3 லட்சம் ரூபாய் வரை செலவழித்து இரு இடங்களில் போர்வெல் அமைத்தார். ஆனால், ஆயிரத்து 300 அடிக்கு மேல் தோண்டியும் தண்ணீர் வரவில்லை. இதனால் மனமுடைந்த ஆறுமுகம் நேற்று மதியம் பூச்சி மருந்து அருந்தினார். இதறிந்த அவரது குடும்பத்தார், அருகில் இருந்த மருத்துவமனைக்கு சென்றனர். ஆறுமுகத்தை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர்  வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து நெகமம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்ந்து, 32-வது நாளாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்திவரும் நிலையில், வறட்சியினால் கோவையை சேர்ந்த விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...