சின்னியம்பாளையம் பகுதியில் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கறுப்புகொடி கட்டி பொதுமக்கள் போராட்டம்



கோவை சின்னியம்பாளையம் பகுதியில் மதுக்கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் கறுப்புகொடி கட்டி இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவையில் டாஸ்மாக கடைகள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ச்சியாக பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 



அதனொரு பகுதியாக கோவையை அடுத்த சின்னியம்பாளையம் பகுதியில் கோவை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அகற்றப்பட்ட டாஸ்மாக் கடையை விவசாய நிலத்தில் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக அங்கு கட்டிடம் கட்டும் பணிகளும் நிறைவடைந்துள்ளது. 

இதற்கு அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் எதிர்ப்புதெரிவித்து வந்த நிலையிலும் அதற்கான பணிகளை அதிகாரிகள் கைவிடவில்லை. இதனால் அதிர்ப்தி அடைந்த கிராம மக்கள் வீடுகள் மற்றும் கடைகள், தொழிற்சாலைகளில் கறுப்பு கொடிகளை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும் இப்பகுதியில் விவசாய நிலத்தில் டாஸ்மாக் கடை அமைத்தால் விவசாயம் பாதிக்கப்படும் எனவும், ஏற்கனவே தெரு விளக்குகள் இல்லாததால் இந்த பகுதியை கடக்க பொதுமக்கள் சிரமப்பட்டு வரும் நிலையில் மதுக்கடை அமைத்தால் இந்த பகுதியை கடக்கும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர் உட்பட அனைவருக்கும் இடையூறாக அமையும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், தங்களுடைய எதிர்ப்பை மீறி டாஸ்மாக் கடை அமைக்கும் பட்சத்தில் தொடர் போராட்டங்களில் ஈடுபடபோவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...