சிறுதுளியின் "இயற்கையை பேணிக்காப்போம்" இலவச கோடைகால சிறப்பு பயிற்சி முகாம்

இந்த வருட கோடை காலம் மிக அதிக வெப்பத்துடன் தொடங்கி உள்ளது. இது சென்ற வருடங்களை காட்டிலும் மிக அதிகமானதாகும். வருடா வருடம் வெப்பத்தின் தாக்கம், மழையின்மை, நீர் பற்றாக்குறை அதிகரித்தல், சுற்றுச்சூழல் பாதிப்பு போன்றவை அதிகரித்து கொண்டே செல்கிறது. இதை உணர்ந்து, நாம் அனைவரும் சிந்திக்க தொடங்கி இவற்றை பாதுகாக்க ஏதேனும் நடவடிக்கைகளில் ஈடுபடும் பட்சத்தில் நம் இயற்கை அன்னையை சிறிதளவேனும் புன்னகைக்க செய்ய முடியும். 

எனவே, நாம் இப்போது எதிர்கொள்ளும் இந்த சுற்றுச்சுழல் பிரச்சனைகளை முழுமையாக அகற்றிடவும், குழந்தைகளிடத்தே இயற்கை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், தொடர்ந்து 11-வது வருடமாக சிறுதுளி, "இயற்கையை பேணிக்காப்போம்" என்ற தலைப்பில் இலவச கோடைகால சிறப்பு பயிற்சி முகாமை நடத்திவருகிறது.

இதனால் சிறு வயதிலிருந்தே இயற்கையின் முக்கியத்துவம், அவற்றின் பயன்பாடு, பாதுகாக்கும் முறைகள் போன்றவை குழந்தைகளிடத்தில் வெகுவாக வளர்ந்து நாளடைவில் ஒரு இயற்கையான சூழலை அவர்கள் தாமே உருவாக்கிக் கொள்ள வழிவகுக்கிறது.

இந்த வருடம் இம்முகாம் வரும் ஏப்ரல் 17ம் தேதி முதல் 22 ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த முகாமில் கோவையை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்குபெறுகிறார்கள்.

ஒவ்வொரு நாளும் காலை 8 மணிக்கு வ.உ.சி பூங்காவில் கூடும் இம்மாணவர்களுக்கு, அந்தந்த நாள் பற்றிய நிகழ்வுகளின் குறிப்பும், சுற்றுப்புற சூழல் நிபுணத்துவம் பெற்ற அறிஞர்களின் சிறப்புரையும் வழங்கப்படுகிறது.

தொடர்ந்து, மாணவர்கள் நேரடியாக களப்பயிற்சி பெறும் வகையில், அந்நாளைய நிகழ்வு தொடர்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.



Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...