கோவை மாநகராட்சி, சன்லேக் அக்ரோ இன்டஸ்ட்ரீஸ் இணைந்து கர்பிணி பெண்களுக்கு "அமிர்தானியம்" திட்டம் துவக்கம்

கோவை மாநகராட்சியும், சன்லேக் அக்ரோ இன்டஸ்ட்ரீஸ் நிறுவனமும் இணைந்து மாநகராட்சி நகர் நல மையங்களுக்கு சிகிச்சைக்காக வரும் கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் நோயாளிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பொருட்டு சிறுதானியங்களான பொருட்களை வாரம் தோறும் ஒவ்வொரு வியாழக்கிழமைகளில் தொடர்ச்சியாக 6 மாதகாலத்திற்கு இலவசமாக வழங்க திட்டமிட்டு அதற்கு "அமிர்தானியம்" என பெயரிடப்பட்டுள்ளது.

இதன் தொடக்கமாக இன்று (ஏப்ரல் 13) காலை 9.30 மணி அளவில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் மற்றும் துணை ஆணையர் ப.காந்திமதி ஆகியோர் தலைமையில் எஸ்.எம்.எம்.ஹோம் நகர் நல மையத்திற்கு வரும் நோயாளிகள் மற்றும் உடன் வருபவர்களுக்கும் 250 கிராம் திணை சிறுதானியம் பாக்கெட் சுமார் 100 நபர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

மேலும், மாநகராட்சி ஆணையர் சிறுதானியங்களின் நன்மைகள், அதனால் உடலில் சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துதல், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் குறித்து அங்குள்ள அனைவருக்கும் விளக்கி கூறினார்.

இவ்விழாவில் மாநகர நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், எஸ்.எல்.எம்.ஹோம் மருத்துவ அலுவலர்கள் மருத்துவர் இளமதி மற்றும் மருத்துவர் ஹேமலதா, உதவி பொறியாளர் மகேஷ், உதவி செயற்பொறியாளர் கலாவதி, மத்திய மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...