மாநகராட்சியின் பல்வேறு பணிகள் குறித்து 54-வது வார்டு பகுதியில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம் 54-வது வார்டுக்குட்பட்ட ராம்நகர் பகுதிகளில் உள்ள வீடுகளில் காய்கறிக்கழிவுகள் மற்றும் குப்பைக் கழிவுகளைக் கொண்டு தரம் பிரித்து அதில் மக்கும் குப்பையின் மூலம் உரம் தயாரித்து அவர்களது வீட்டுத் தோட்டத்திற்கு பயன்படுத்தி வருவதை கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



இதனைத்தொடர்ந்து, அப்பகுதியில் வசிக்கும் வீடுகளுக்குச் செல்லும் மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதையும், ராம் நகர் பகுதிகளில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகளைக் கொண்டு மாநகராட்சி துவக்கப் பள்ளியில் உரம் தயாரிக்கும் மையத்தையும் க.விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார்.



இந்நிகழ்வுகளின் போது நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், மத்திய மண்டல உதவி ஆணையர் (பொ) மோகனசுந்தரி, மாநகராட்சி பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...