வால்பாறை சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் பங்குனி உத்திர திருவிழா நிறைவு


வால்பாறை சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் பங்குனி உத்திர திருவிழா வருடா வருடம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டும் 65-ம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழா ஏப்ரல் 6-ம் தேதியன்று கொடியேற்றத்துடன் துவங்கி 10-ம் தேதி வரை நடைபெற்றது. 



திருவிழாவின் கடைசி நாளான திங்களன்று காலை கணபதி ஹோமத்துடன் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. மதியம் 12 மணியளவில் கோவில் வளாகத்தில் அன்னதானம் நடைபெற்றது. அன்னதானத்தினை வள்ளிக்கன்னு, மதனகோபால் முதலியார், மருத்துவர் முனிசாமி மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் முத்துராஜ், நகராட்சி ஆணையாளர் சம்பத்குமார் மற்றும் வனத்துறையினர் ஆகியோர்கள் துவக்கி வைத்தனர்.



முன்னதாக, பக்தர்கள் அங்க அலகு பூட்டி நல்லகாத்து ஆற்றில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக பறவைக்காவடியில் தொங்கியவாரு ஊர்வலமாக வந்து சுப்பிரமணிய சுவாமி கோவிலை அடைந்து வழிபாடுகள் செய்தனர்.



தொடர்ந்து கரகாட்டம், செண்டமேளம், சிக்காட்டம், இன்னிசை நிகழ்ச்சி, நடன நிகழ்ச்சி மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இரவு 8 மணியளவில் சுவாமி முக்கிய வீதிகள் தேர்பவனி சென்று இரவு 12 மணியளவில் கோவிலை வந்தடைதல் நடைபெற்று. இதைத்தொடர்ந்து, நள்ளிரவு 2 மணிக்கு மஹா அபிஷேகம் நடைபெற்று 3 மணிக்கு வானவேடிக்கையுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...