உணவு பாதுகாப்பு துறை ஆணையர் தலைமையில் அனைத்து உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு ஆய்வுக் கூட்டம்


கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் அலுவலகத்தில் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் தலைமையில் அனைத்து உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அச்சிடப்பட்ட செய்தி தாள்களில் உணவு பொருட்களை பொட்டலமிடுவதற்கு பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது குறித்தும், தடையினை மீறி பயன்படுத்தும் போது பறிமுதல் செய்வதோடும் மற்றும் பயன்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

மேலும், தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் குளிர்பான கடைகள், தர்பூசணி பழக் கடைகள், பழச்சாறு விற்பனை நிலையம், ஐஸ் க்ரீம் கடைகள் மற்றும் சாலையோர மாலை நேர சிற்றுண்டி கடைகள் நடத்தும் உணவு வணிகர்களிடம் பாதுகாப்பான குடிநீர், செயற்கை நிறமி இல்லாத உணவு பொருட்கள், ஒரு முறை உபயோகப்படுத்திய எண்ணெய்யை மீண்டும் உபயோகப்படுத்துதல் கூடாது என்றும், இது தொடர்பாக ஆய்வு செய்யுமாறு அறிவுரை வழங்கப்பட்டது.

மேலும், பாதுகாப்பற்ற மற்றும் தரமற்ற உணவு பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீதும், காலாவதியான குளிர்பானங்கள் மற்றும் சுகாதாரமற்ற உணவு பொருட்களை விற்பனை செய்பவர்கள் பற்றிய தகவல் தெரிந்தால் புகார்களை 0422- 2220922 என்ற தொலைபேசி எண்ணிற்கு தெரிவிக்கலாம் என தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை உணவு பாதுகாப்பு பிரிவு நியமண அலுவலர் தெரிவித்துள்ளார்.



Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...