கோவையில் நடத்துனரை கத்தியால் குத்திய ரயில்வே பாதுகாப்புப்படை காவலரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு


பயணச்சீட்டு வழங்குவதில் பேருந்து நடத்துனருக்கும், காவலருக்கும் இடையே ஏற்பட்ட வாக்கு வாதத்தில் நடத்துனரை கத்தியால் குத்திய ரயில்வே காவலரை நீதிமன்ற காவலில் அடைக்க கோவை 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து கோவையை நோக்கி இன்று காலை அரசு பேருந்து வந்துகொண்டிருந்த பேருந்தில் நடத்துனருக்கும், போத்தனூர் ரயில்வே காவலர் சிவராமசந்திரனுக்கும் பயணச்சீட்டு தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் நடத்துனர் பாண்டியராஜனின் காலில் ரயில்வே பாதுகாப்புப்படை மோப்ப நாய் பிரிவு காவலர் சிவராமச்சந்திரன் கத்தியால் குத்தியுள்ளார்.

இதைத்தொடர்ந்து சிவராமச்சந்திரனை காட்டூர் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்த நிலையில், ரயில்வே பாதுகாப்புப்படை மோப்ப நாய் பிரிவு காவலர் சிவராமச்சந்திரனை வரும் 24-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க கோவை 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...