சிவன்மலை கோவிலுக்கு சொந்தமான விவசாய நிலத்தை ஏலம் விடுவதற்கு எதிர்ப்பு – விவசாயிகள், காவல்துறை இடையே தள்ளுமுள்ளு

காங்கேயம் அருகேயுள்ள சிவன்மலை கோவிலுக்கு சொந்தமான விவசாய நிலத்தை ஏலம் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் ஏலம் விட முடியாமல் அறநிலைத்துறை அதிகாரிகள் திணறி வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான இனம் நிலங்களை கடந்த மூன்று தலைமுறைகளாக விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் சிவன்மலை கோவிலுக்கு சொந்தமான நிலத்தை நேற்று முன்தினம் ஏலம் விடப்படும் என இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் கிராம நிர்வாக அலுவலகத்தில் அறிவிப்பை ஒட்டிவைத்தனர்.

அதைத் தொடர்ந்து இன்று ஏலம் துவங்கும் முன்பே விவசாயிகள் அலுவலகத்தை முற்றுகையிட்டு முறையிட்டனர். ஆனால் விவசாயிகளை காவல்துறையினரை வைத்து தடுத்து கோவில் மேல் மண்டபத்தில் தனிநபர்கள் 15 பேர் மட்டுமே அனுமதித்து ஏலம் விடமுயற்சி செய்தனர். ஆனால், தடைகளையும் மாறி ஏலம் நடைபெறும் இடத்திற்கு சென்று விவசாயிகள் கோஷமிட்டனர். இதனால் காவல்துறையினருக்கும், விவசாயிகளுக்கும் இடையை தள்ளுமுள்ளு ஏற்பட்டது.



முதல்வர் ஸ்டாலின் மற்றும் எம்பி கனிமொழி, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சாமிநாதன், சேகர்பாபு, கயல்விழி செல்வராஜ் ஆகியோரின் தேர்தல் வாக்குறுதி என்ன ஆச்சு என்று பெண் விவசாயிகள் ஆவேசமாக பேசினர்.

இதனால் ஏலம் நடத்தமுடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர். அறநிலையத்துறை அலுவலகத்திற்குள்ளும் விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கோவிலுக்கு சுவாமி தரிசனத்திற்கு வந்த பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர். இதனால் சிவன்மலை பகுதியில் பரபரப்பு நிலவி வருகின்றது.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...