கோடை வெயில் வாட்டும் நிலையில் நீலகிரியில் சுற்றுலா பயணிகள் குவிந்துவருவதால் போக்குவரத்து மாற்றம்


தமிழகத்தில் சமவெளி பகுதிகளிலும் கேரளா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களிலும் வெப்பநிலை 100 டிகிரியை தாண்டி சுட்டெரித்து வரும் நிலையில் தற்போது நீலகிரி மாவட்டத்தில் நிலவும் சீதோஷ்ண நிலையை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். 

இதனால் நீலகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட உதகை, குன்னூர் போன்ற பகுதிகளில் அதிகளவில் வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது. ஒரு பகுதியை கடக்க பல மணிநேரம் ஆகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். 

இதனை கருத்தில் கொண்டு மாவட்ட காவல்துறை இதுவரை எந்த கோடைக் காலங்களிலும் இல்லாத அளவிற்கு வாகன கட்டுப்பாடு கொண்டு வந்துள்ளது. 

அதன்படி, கடந்த சனிக்கிழமை முதல் (ஏப்ரல் 8) வரும் மே 31ம் தேதி வரை கோவையிலிருந்து உதகைக்கு வரும் சுற்றுலா வாகனங்கள் காட்டேரி ஜங்ஷனிலிருந்து கேத்தி பாலடா வழியாக உதகைக்கும், கர்நாடகாவிலிருந்து கல்லட்டி வழியாக வரும் இலகுரக வாகனங்கள் தலைக்குந்தாவிலிருந்து புதுமந்து வழியாக உதகைக்கும், இதேபோல் கேரளாவிலிருந்து தலைக்குந்தா வழியாக வரும் இலகுரக வாகனங்கள் குலிச்சோலை வழியாக உதகைக்கு அனுமதிக்கப்படும்.

உள்ளூர் வாகனங்கள் தவிர்த்து வேறு எந்த வாகனங்களும் கல்லட்டி மலைபாதையில் அனுமதிக்கப்படமாட்டாது என்று நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளிரம்பா தெரிவித்துள்ளார்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...