சமுதாய முன்னேற்றத்திற்கும், மொழி வளர்ச்சிக்கும் அரும்பணியாற்றிவர்களுக்கான ஐந்தமிழ் சாதனையாளர் விருதுகள்


கோவை சுழற்சங்கம் சார்பில் ஐந்தமிழ் விருதுகள் வழங்கும் விழா அவிநாசி சாலையில் உள்ள சேம்பர் டவர், பால் ஹரிஸ் ஹாலில் நேற்று  மாலை 7 மணியளவில் நடைபெற்றது. விழாவினை கோவை சுழற்சங்கம் தலைவர் குருதீப் சிங் தொடங்கி வைத்து வரவேற்புரை வழங்கினார். சிந்தனைக் கவிஞர் கவிதாசன் விழாவிற்கு தலைமை தாங்கினார். விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கோவை சுழற்சங்கம் துணை ஆளுநர்  மாரப்பன் கலந்து கொண்டார்.



பின்னர், கோவை சுழற்சங்கம் சார்பாக இந்த ஆண்டு சமுதாய முன்னேற்றத்திற்க்காகவும், மொழி வளர்ச்சிக்காகவும் அரும்பணியாற்றி வருகின்ற ஐந்து சாதனையாளர்களை அங்கீகரிக்கவும், ஊக்குவிக்கும் வகையில் இயல், இசை, நாடகம், ஆன்மீகம் மற்றும் அறிவியல் போன்றவற்றில் சிறந்து விளங்கியவர்களை தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கப்பட்டது. 



அதில், இசைத்தமிழ் மாமணி விருது ஸ்வர்ணா சோமசுந்தரத்திற்கும், நாடகத் தமிழ் மணி விருது குமரேசனுக்கும், ஆன்மீகத் தமிழ் மாமணி விருது மருதாச்சலாம் அடிகளாருக்கும், அறிவியல் தமிழ் மாமணி விருது மோகனுக்கும், இயற்றமிழ் மணி விருது கோவை கோகுலம் ஆகியோருக்கும் வழங்கப்பட்டது.



பின்னர், விழாவில் பேசிய சிந்தனைக் கவிஞர் கவிதாசன்; ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு சிறப்புள்ளது. தமிழ்நாட்டின் சிறப்பு நமது தமிழ் மொழியும், கலாச்சாரமும் தான். எனவே அடுத்த தலைமுறைக்கு இந்த தமிழையும், கவிதையும், கலாச்சாரத்தையும் எடுத்து சொல்லும் பொறுப்பு நம்மிடம் உள்ளது. ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் பேசக்கூடியவர்களை கண்டு ஆச்சரியப்படுவார்கள். ஆகவே, நாம் தமிழை ஒரு மொழியாக மட்டும் பார்க்காமல் கலாச்சாரமாக பார்த்து அந்த தமிழ் அறிஞர்களை ஊக்குவிக்கும் விதமாக இந்த கோவை சுழற்சங்கம் ஆண்டுதோறும் ஐந்தமிழ் விருதுகள் வழங்க உறுதியளித்துள்ளது. 



அன்று முத்தமிழ் விருந்தாக இயல், இசை, நாடகத்திற்கு விருதுகள் வழங்கப்பட்டு வந்தது. இன்று ஐந்தமிழ் விருந்தாக ஆன்மிகம் மற்றும் அறிவியலுக்கும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அறிவியலில் தேடல் இல்லாமல் போனால் நாம் தொலைந்து போய்விடுகிறோம். ஆன்மீகத்தில் தேடித் தேடி தொலைந்து கரைந்து போய்விடுகிறோம் இதுவே அறிவியலுக்கும், ஆன்மீகத்திற்கும் உள்ள வித்யாசம். எனவே, ஆன்மீகத்தை ஒரு கண்ணாகவும், அறிவியலை மற்றொரு கண்ணாகவும் வைத்து நாம் இந்த உலகத்தை பார்க்க வேண்டும். இதுபோன்ற ஐந்தமிழ் விருதுகள் வழங்கும் கோவை சுழற்ச் சங்கத்திற்கு பாராட்டுக்களை தெரிவித்தார்.   

                 

விழாவில், கோவை சுழற்சங்கம் செயலாளர் ராம்குமார், கோவை சுழற்சங்கம் திட்டத் தலைவர் சித்ரா மனோகரன், கோவை சுழற்சங்க தொழில்முறை சேவை இயக்குநர் நாராயணன் குமார் மற்றும் கோவை சுழற்சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...