காசிக்கு அழைத்துச் செல்வதாக 2 ஆயிரம் பேரிடம் மோசடி: 70 லட்சம் ரூபாயை மீட்டு தர வேண்டி பாதிக்கப்படவர்கள் புகார்

காசி, கயா உள்ளிட்ட ஆன்மீக தளங்களுக்கு யாத்திரை அழைத்து செல்வதாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் ரூ.70 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜோசம் என்கிற சிவருத்திரன். இவர் கோவை காந்திபுரம் பகுதியில் சிவா பக்தர்களை யாத்திரை அழைத்து செல்லும் சிவன் படை என்ற அமைப்பை நடத்தி வந்தார். 

இந்த ஆண்டு மே மாதம் சிவபெருமானின் திருத்தலங்களாக கூறப்படும் காசி, கயா, ஹரிதுவார், ரிஷிகேஷ் உள்ளிட்ட இடங்களுக்கு புனித யாத்திரை செல்ல இருப்பதாக சிவபக்தர்களிடம் கூறியுள்ளார். 

இதை நம்பி கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்டோர் ஜோசப்-யிடம் முன்பணம் கொடுத்துள்ளனர்.  ஒவ்வொருவரிடம் இருந்தும் ரூ.3 முதல் 5 ஆயிரம் வரை பணம் வாங்கிய ஜோசப் கடந்த 2 நாட்களுக்கு முன் தலைமறைவானார். இதனால், அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தங்கள் பணத்தை மீட்டுத் தருமாறு கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். 

தொடர்ந்து, ஜோசப் என்ற சிவருத்திரனை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...