பவானி ஆற்றில் மின்மோட்டார் மூலம் விவசாயத்திற்கு தண்ணீர் எடுக்க மாவட்ட வருவாய் துறை கட்டுப்பாடு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பவானியாற்றிலிருந்து கோவை மாநகரத்திற்கு மட்டுமின்றி திருப்பூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட ஊர்களுக்காக 16 கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன.

மேலும் தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் என பெரிய அளவில் அரசு அனுமதியுடன் மின் மோட்டார் மூலம் பவானியாற்றிலிருந்து தண்ணீர் எடுக்கப்படுகிறது.

இதே போல் பவானியாற்றிலிருந்து விவசாய பாசனத்திற்கு நெல்லித்துறை முதல் சிறுமுகை வரை 200-க்கும் மேற்பட்ட மின் மோட்டார் மூலம் விவசாயிகள் தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர். இதனிடையே பருவமழை தவறியதால் பவானியாற்றிலிருந்து பவானிசாகர் அணைக்கு செல்லும் தண்ணீர் தடைபட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, நீர்நிலை மேலாண்மையினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்த அறிக்கையைத் தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஆலாங்கொம்பு பகுதியில் விவசாய பாசனத்திற்கு செல்லும் மின் மோட்டார்கள் துண்டிக்கப்பட்டது.

இதையடுத்து மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கோவை மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன் தலைமையில் விவசாயிகளுடன் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பேசுகையில், தமிழகத்தில் 32 மாவட்டங்கள் வறட்சி மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

2047 கோடி ரூபாய் வறட்சி நிவாரண நிதியாக வழங்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்திற்கு 184 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. குடிநீர் ஆதாரத்தை பேணிக்காக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாலும் 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் குடி நீர் ஆதாரமாக பவானி ஆறு விளங்குகிறது. ஆகவே இப்பகுதி விவசாயிகள் பாசனத்திற்காக எடுக்கப்படும் தண்ணீரின் அளவை குறைத்துக்கொள்ள வேண்டும். வாரத்தில் 3 நாட்கள் மின் மோட்டார் மூலம் பவானியில் இருந்து நீர் எடுப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் வைத்தார்.

இதற்கு விவசாய சங்க துணைத்தலைவர் ராஜேந்திரன் பதிலளித்து பேசினார். பின்னர் தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தரும் வகையில் வட்டாட்சியர் அலுவலகம் முன் கண்டன முழுக்கங்களை விவசாயிகள் எழுப்பினர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...