தில்லியில் போராடிவரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக, கோவை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

விவசாய கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லியில் தமிழக விவசாயிகள் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு ஆதரவாகவும், தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்தும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, கோவை அரசு கலைக்கல்லூரி முன்பாக மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தின் போது, விவசாயிகளுக்கு ஆதரவாக மாணவர்கள் போராடுவதை ஒடுக்கும் வகையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்திற்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த மாணவர்கள், விவசாயிகளின் போராட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ள மறுப்பதாக குற்றம்சாட்டினர்.

விவசாயிகள் பிரச்சனைக்கு மத்திய அரசு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்திய மாணவர்கள், அவ்வாறு நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தவறினால், தமிழக மாணவர்கள் ஒன்றிணைந்து தொடர் போராட்டங்கள் நடத்தப்படுமென தெரிவித்தனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...