அனைத்துக் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் அறிவுரை

போலியோ சொட்டு மருந்து 1581 மையங்களில் 5 வயதிற்குட்பட்ட 3.33 லட்சம் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. ஒரு குழந்தை கூட விடுபடாத அளவிற்கு கண்டிப்பாக சொட்டுமருந்து போட்டுக்கொள்ள வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரின் தெரிவித்துள்ளார்.

கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இன்று பொது சுகாதராம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறையுடன் ரோட்டரி கிளப் இணைந்து 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தீவிர போலியோ சொட்டுமருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்தினை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வழங்கியதுடன் முகாமை துவக்கி வைத்து பேசினார். 

அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் தீவிர போலியோ சொட்டுமருந்து முகாம் 2.04.2017 மற்றும் 30.04.2017 ஆகிய இரண்டு தினங்கள் நடைபெறுகிறது. இந்த முகாமில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் கட்டாயம் போலியோ சொட்டுமருந்து போட்டுக்கொள்ள வேண்டும்.



பெற்றோர்களுக்கு ஏதுவாக அரசு தலைமை மருத்துவமனை, தாய் சேய் நல விடுதி, பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம், கோவில்கள், மற்றும் பொதுமக்கள் அதிக கூடும் இடங்கள் என 34 மையங்கள் செயல்படுவதுடன் 20 நடமாடும் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு செயல்படுகின்றன.

அனைத்து முகாம்களிலும் போதிய அளவு போலியோ சொட்டு மருந்து தயார் நிலையில் உள்ளது. மேலும் வெளிமாநிலங்களிலிருந்து பணி நிமிர்த்தமாக இடம்பெயர்ந்து வசிக்கின்ற குடும்பங்களை சேர்ந்த 1357 குழந்தைகளுக்கும் சிறப்பு முகாம் மூலம் போலியோ சொட்டு மருந்து உத்திரவிடப்பட்டுள்ளது.

அரசால் வழங்கப்படும் போலியோ சொட்டு மருந்து மிகவும் தரமானது, பாதுகாப்பானது, உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்றது. போலியோ சொட்டு மருந்து வழங்குவதன் மூலம் குழந்தைகளுக்கு எந்தவிதமான பின்விளைவுகளும் ஏற்படாது.

இது நோய் தாக்குதலிருந்து குழந்தைகளை பாதுகாக்கக் கூடிய முக்கியமான மருந்தாக திகழக்கூடிய ஒன்றாகும். இதற்காக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பொது சுகாதாரத்துறையுடன் அங்கன்வாடி பணியாளர்கள், பிறதுறை பணியாளர்கள் மற்றும் ரோட்டரி இன்டர்நேஷனல் நிறுவனம், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என 6324 பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.

திட்டமிட்டப்படி 3.33 லட்சம் குழந்தைகளுக்கு தீவிர போலியோ சொட்டு மருந்து போட்டுக்கொள்ளும் விதமாகவும் ஒரு குழந்தை கூட விடுபடாத அளவிற்கும் மேலும் முன்பு எத்தனை முறை சொட்டு மருந்து குழந்தைகளுக்கு கொடுத்திருந்தாலும் தற்பொழுது நடைபெறுகின்ற இரண்டு முகாம்களிலும் பெற்றோர்கள் சிறப்பு கவனம் எடுத்து 5 வயதிற்குட்பட்ட தங்கள் குழந்தைகளுக்கு கட்டாயம் போலியோ சொட்டுமருந்து போட்டுக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.எட்வின்ஜோ, பொது சுகாதாரத்துறை துணை இயக்குநர் மரு.பானுமதி, குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர்கள் மரு.சுகந்தி, மரு.மனோண்மணி, மரு.பூமா, மற்றும் ரோட்டரி கிளப் நிர்வாகிகள், அரசு மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...