அனைத்து வார்டுகளில் உள்ள கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க மாநகராட்சி ஆணையர் உத்தரவு !


கோவை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டு பகுதிகளில் உள்ள பொது மக்கள் புதிய கட்டிடங்கள் கட்டும்போதும், கூடுதலாக அறைகள் கட்டும்போதும், புதிதாக மேற்கூறைகள் அமைக்கும் போதும் மற்றும்  மாநகராட்சி மூலம் பூங்காக்கள் அமைத்தல் மற்றும் மராமத்துப் பணிகள் செய்யும் பொழுது மழைநீர் சேமிப்புத் தொட்டிகள் அமைக்கப்பட வேண்டும் என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில், “கோவை மாநகராட்சிப் பகுதிகளில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், கோவை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டு பகுதிகளில் உள்ள பொது மக்கள் புதிய கட்டிடங்கள் கட்டும்போதும், கூடுதலாக அறைகள் கட்டும்போதும், புதிதாக மேற்கூறைகள் அமைக்கும் போதும் மற்றும் மாநரகாட்சி மூலம் பூங்காக்கள் அமைத்தல் மற்றும் மராமத்துப் பணிகள் செய்யும் பொழுது மழைநீர் சேமிப்புத் தொட்டிகள் அமைக்கப்பட வேண்டும்.

மேலும், மாநகராட்சிப் பொறியாளர்களுக்கும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டு பகுதிகளில் புதிய கட்டிடங்கள் கட்டும்போதும், கூடுதலாக அறைகள் கட்டும்போதும், புதிதாக மேற்கூறைகள் அமைக்கும் போதும் மற்றும் மாநரகாட்சி மூலம் பூங்காக்கள் அமைத்தல் மற்றும் மராமத்துப் பணிகள் செய்யும் பொழுது மதிப்பீடுகள் தயாரிக்கும் பொழுது மழைநீர் சேமிப்புத் தொட்டிகள் அமைப்பதற்கான தொகையினையும் மேற்படி மதிப்பீட்டில் சேர்த்து தயாரிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மாநகராட்சிப் பொறியாளர்களும் தங்கள் வார்டு பகுதிகளிலுள்ள அனைத்து மாநகராட்சிக் கட்டிடங்களையும் ஆய்வு செய்து மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதை உறுதிசெய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பில்லாத மாநகராட்சி கட்டிடங்களுக்கு அதனை ஏற்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.” இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...