ஜெம் மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் சி.பழனிவேலுக்கு இரண்டாவது முறையாக டாக்டர். பி.சி ராய் தேசிய விருது


கோவை, ஜெம் மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் தலைமை மருத்துவரும், இரைப்பை மற்றும் குடல் சார்ந்த லேப்பிராஸ்கோப்பி அறுவை சிகிச்சையில் உலகப்புகழ் பெற்ற மருத்துவரான டாக்டர் சி.பழனிவேலுக்கு 2015ம் ஆண்டு மருத்துவத்துறையில் மிக உயரிய விருதான டாக்டர். பி.சி ராய் தேசிய விருது வழங்கப்பட்டது. மீண்டும் இரண்டாவது முறையாக சிறந்த மருத்துவர் என்ற முறையில் இந்த ஆண்டும் டாக்டர். பி.சி ராய் தேசிய விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.



இதன்மூலம் இவ்விருதை இரண்டு முறை மருத்துவத்துறைக்காக குடியரசுத் தலைவரிடம் பெற்ற முதல் மருத்துவர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.

தென்னிந்தியாவில் முதன்முதலில் லேப்பிராஸ்கோப்பி அறுவை சிகிச்சை முறையை 2001ம் ஆண்டு இவர் அறிமுகப்படுத்தினார். அதனைத்தொடர்ந்து, இத்துறையில் இவர் பல புதிய கண்டுபிடிப்புகள் மூலம் பல பரிசுகளை பெற்றர். 

இங்கிலாந்து, அமெரிக்க ஐக்கியநாடுகள், கொரியா, சீனா போன்ற மேலும் பல நாடுகளிலும் லேப்பிராஸ்கோப்பி அறுவை சிகிச்சையை செய்து காண்பித்ததோடு , அதை கற்றுக்கொடுக்கும் சிறந்த மருத்துவராவார். மேலும், 'உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய்க்கு எதிராக போராடுவோம்' என்ற சமூக அமைப்பை நிறுவி, கோவை ரோட்டரி கிளப் உடன் இணைந்து ஏழை மக்களுக்கு 'கேர் ஃபார் லைஃப்' என்ற திட்டத்தின் மூலம் குடல் சார்ந்த புற்றுநோய்களுக்கு இலவச அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார்.

இது குறித்து ஜெம் மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் தலைமை மருத்துவர் டாக்டர் சி.பழனிவேலு கூறுகையில், தென்னிந்தியாவில் நான்கு பேருக்கு மருத்துவத்துறையில் மிக உயரிய விருதான டாக்டர். பி.சி. ராய் தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி விருதுகள் வழங்கி வருகிறது. அதுபோல் மருத்துவத்துறையில் மிக உயரிய விருதான டாக்டர். பி.சி. ராய் தேசிய விருது வழங்கப்படுவதாக கூறினார்.

மேலும், உலக மருத்துவர் தினம் ஜுலை 7ம் தேதி உலகம் முழுதும் கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்திய அரசு டாக்டர். பி.சி, ராய் பிறந்த தினமான ஜுலை 1ம் தேதி இந்தியாவில் மருத்துவர் தினம் கொண்டாடுகிறது. இந்தியாவில் 2001ம் ஆண்டில் ஜெம் மருத்துவமனை லேப்பிராஸ்கோப்பி அறுவை சிகிச்சை மேற்கொண்டு இன்றுவரை பல சாதனைகளை புரிந்துள்ளது.

இதன் மூலம் இந்த உயரிய மருத்துவதிற்கான விருது இரண்டு முறை கிடைத்துள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் லேப்பிராஸ்கோப்பி அறுவை சிகிச்சைக்கு இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் இங்கு வந்து சிகிச்சை மேற்கொள்கின்றனர். இது நம்பிக்கை மற்றும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என அவர் கூறினார்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...