சிலை திருட்டு குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தாததால் சாலை மறியலில் ஈடுபட்ட பொது மக்கள்

அன்னூர் அருகே 200 ஆண்டுகள் பழமையான கோவில் சிலை திருட்டு குறித்து புகார் அளித்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள சிறுமுகை அடுத்த ஆணைப்பள்ளி புதூரில் சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கருப்பராயன் கோவில் உள்ளது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தினை சேர்ந்தவர்களுக்கு குழதெய்வமாக இருக்கக் கூடிய இந்த கோவிலின் மூலவரான கருப்பராயன் சிலையை கடந்த 2 நாட்களுக்கு முன்பு மர்மநபர்கள் கடத்திச் சென்றனர்.

இது குறித்து ஊர் பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் சிறுமுகை காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். இருப்பினும் காவல்துறையின போதிய அக்கறையின்றி அலட்சியம் காட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆணைப்பள்ளி புதூர் கிராம மக்கள் இன்று கோவில் அருகே திரண்டு சாமி சிலையை கடத்தியவர்களை கைது செய்ய காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காத சிறுமுகை காவல்துறையினரை கண்டித்தும் அன்னூர் சிறுமுகை நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த அரசு பேருந்தினை சிறைபிடித்த பொதுமக்கள் தங்களுக்கு உரிய நியாயம் வழங்கப்பட வேண்டும், சிலை கடத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோசங்களை எழுப்பினர்.

இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த சிறுமுகை காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. போராட்டம் காரணமாக அன்னூர்- சிறுமுகை சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...