வறட்சி நிவாரண நிதியில் கோவைக்கு அதிகபடியாக ரூ.180 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்

கோவை மாநகர மாவட்ட செயலாளர் அருண்குமார் நீக்கப்பட்டதை அடுத்து புதிய செயலாளராக தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதைத்தொடர்ந்து, இன்று அமைச்சர் எஸ்.பி,வேலுமணி முன்னிலையில் அம்மன் அர்ஜுனன் பொறுப்பேற்று கொண்டார்.

இந்நிகழ்ச்சியை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறுகையில், கோவைக்கு அறிவிக்கப்பட்ட புதிய கட்டிட திறப்பு விழா, மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக நாளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி கோவை வர உள்ளார்.

தொடர்ந்து, கோவைக்கு அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு திட்டங்கள் தற்போதைய ஆட்சியில் நிறைவேற்றப்படும். வறட்சி நிவாரண நிதியில் கோவை மாவட்டத்திற்கு அதிகபடியாக 180 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், தென்னை விவசாயத்திற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 

மேலும், வரும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை முழுமையாக செயல்படுத்த வேண்டுமானால் தற்போதைய ஆளுங்கட்சி தான் வெற்றி பெற வேண்டும்.

மேலும், திமுக-வே நமக்கு எதிரி எனவும், ஒற்றுமையாக இருந்து ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலைக்கு வக்களிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Newsletter

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...