ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் இன்று உலக நுகர்வோர் உரிமை தினம் அனுசரிப்பு

கோவையில் செயல்பட்டு வரும் ஸ்ரீ நாராயண குரு கல்லூரியின் குடியுரிமை நுகர்வோர் கிளப் சார்பில் அக்கல்லூரியின் விவேகானந்தா ஹாலில் இன்று உலக நுகர்வோர் உரிமை தினம் அனுசரிக்கப்பட்டது.



இந்நிகழ்வில் குடியுரிமை நுகர்வோர் கிளப் ஒருங்கிணைப்பாளர் எம்.மகேஷ்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் கே.வி.சுரேந்திரன் இந்நிகழ்விற்கு தலைமையேற்று உரையாற்றினார். 

கோவை பிஐஎஸ் விஞ்ஞானி வி.ரமேஷ் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், பிஐஎஸ் எவ்விதமான செயல்களை மேற்கொள்ள வேண்டும், மற்றும் உலக நுகர்வோர் உரிமை தினம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு நுகர்வோர் சங்க பொதுச் செயலாளர் என்.பிரதீப் குமார், நுகர்வோர் உரிமைகள் மற்றும் குடியுரிமை நுகர்வோர் கிளப்பின் பங்கு மற்றும் முக்கியத்துவம் குறித்து கலந்துரையாடினார்.



நிரைவாக, வர்த்தகத்துறை துணை பேராசிரியர் எஸ்.பாலாஜி நன்றியுரையாற்றினார். இந்நிகழ்ச்சியில், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள், மாணவ, மாணவிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...