உணவு பண்டங்களை செய்தித்தாளில் வைத்து சாப்பிடுபவரா நீங்கள்? முதலில் இதை படியுங்க..!

செய்தித்தாள் வாங்கி அதை படிக்கிறோமோ இல்லையோ! அன்றைய நாள் முடிவதற்குள் அந்த செய்தித்தாள் கசக்கப்படுகிறது. அல்லது சப்பாத்தி மாவை உருட்டி சேமிக்க பயன்படுகிறது.

ஆயிரமாயிரம் கருத்துக்கள் மற்றும் எண்ணங்கள் அச்சிடப்பட்டிருக்கும் செய்தித்தாளின் மதிப்பு ஒற்றை இலக்கத்தில் முடிவதாலே அதன் மதிப்பை குறைத்து எடைபோட்டு வருகிறோம். சரி இன்றைய ‘டாப்பிக்’-க்கு வருவோம். 

கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9-ம் தேதி மத்திய உணவு மற்றும் தர நிர்ணய ஆணையம் திடுக்கிடும் தகவல் ஒன்றை அளித்தது. அதில், ‘செய்தித்தாள்களில் உணவுப் பண்டங்களை வைத்து உண்ணக்கூடாது, அப்படி உண்ணும் போது செய்தித்தாள்களில் அச்சிடப்பட்ட மை உணவின் மூலம் உடலுக்குள் செல்லும். அதனால் புற்று நோய் வர வாய்ப்புள்ளது’ என்று கூறியது. இதை தொடர்ந்து, செய்தித்தாள்களில் உணவுப் பொருட்களை மடித்து தர தடை செய்து உத்தரவிட்டது.

இந்த பகீர் செய்தியை அறிந்த சில தாய்மார்கள் சப்பாத்தி மாவினை செய்தித்தாள்களில் உலரவைக்கும் நவீன தொழில்நுட்பத்தை கைவிட்டுவிட்டனர். இந்த தகவலை அறியாத பலர் இன்னும் செய்தித்தாள்களை உணவு பொருட்களை வைத்து உண்டு வருகின்றனர்.

மளிகை கடைகளிலும், பெட்டிக்கடைகளிலும் பண்டங்களை மடித்து கொடுக்க பயன்படும் செய்தித்தாள்கள், காலம்காலமாக பேக்கரியில் போடும் பஜ்ஜியின் எண்ணையை பிழிந்தெடுக்கவும் பயன்பட்டுக் கொண்டிருக்கிறது. என்ன அபாயம் உள்ளது?, என்று அறியாமல் எண்ணை அதிகம் என்று பேக்கரி மாஸ்டரிடம் கடிந்து கொள்கின்றனர் நம்மவர்கள்.

என்ன இருக்கு?

வெற்று தாள்களில் செய்திகளை அச்சடிக்க கிராபைட் என்ற அச்சு மை பயன்படுகிறது. பொதுவாக செய்தித்தாளை அழுத்த தேய்க்கும் போதோ அல்லது அதில் தண்ணீர் படும் போதோ இந்த கிராபைட் மை பிரிந்து வருவதை நம்மால் காண முடியும்.

இந்த நச்சு மை சிறிதளவில் உடலுக்குள் சென்றாலும், சிறுநீரகம், தசை வளர்ச்சி பாதிப்பு மற்றும் கல்லீரல் பாதிப்பு போன்ற பல அபாயங்கள ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய உணவு மற்றும் தர நிர்ணய ஆணையம் எச்சரித்துள்ளது. இதை அறியாமல் வியாபாரிகள் தொடர்ந்து, செய்தித்தாள்களில் உணவை மடித்து கொடுக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.

இது குறித்து கேஎம்சிஎச் மருத்துவர் அருள்ராஜ் கூறியதாவது:-

செய்தித்தாள்களை வாங்கி படித்துவிட்டு அதை நாம் அப்படியே வீட்டின் எதாவது ஒரு மூளையில் வீசிவிடுவோம். அந்த செய்தித்தாளின் மீது ஏராளமான நச்சு கிருமிகளும், குப்பைகளும் படிந்துவிடுகின்றன. பின் ஏதேனும் தேவையின்போதோ, உணவுப் பொருட்களை மூடவோ, மடிக்கவோ மீண்டும் அந்த செய்தித்தாளை எடுத்து பயன்படுத்துவோம். இதன்மூலம் அந்த செய்தித்தாளில் உள்ள குப்பை மற்றும் கிருமிகள் நம் உணவுடன் உடலில் கலந்து பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு அதிகரிக்கின்றது.

மேலும், சாதாரண தாளில் செய்திகளை அச்சிடும் போது அதில் பயன்படுத்தப்படும் இரசாயன வண்ணம் மற்றும் மை போன்றவை உணவுடன் கலந்து நம் உடலில் சேகரமாகிறது. இவ்வாறாக அதிகப்படியாக நாம் உட்கொள்ளும்போது அது நம் உடலில் தேங்கி வயிற்றுவலி உள்ளிட்ட பிரச்சனைகள் வர வாய்ப்புகள் உள்ளது' என்றார்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...