வாகனங்களை ஓட்டும் போது செல்போன் பயன்படுத்தும் 'உபர்' டேக்சி ஓட்டுநர்கள்


சாலையில் வாகனங்களை ஓட்டும் போது செல்போன்கள் பயன்படுத்தக் கூடாது எனவும் இதனால் கவனம் சிதறி விபத்துக்கள் ஏற்படும் எனவும் சாலை பாதுகாப்பு விதி உள்ளது. மேலும், வாகனங்களை ஓட்டிக்கொண்டிருக்கையில் செல்போன்கள் பயன்படுத்துவதாலேயே அதிகப்படியான விபத்துகள் ஏற்பட்டு வருகிறது என புள்ளிவிபரங்களும் கூறுகிறது.

இருப்பினும பெரும்பாலான வாகன ஓட்டிகள் சாலையில் வாகனங்களை இயக்கிக்கொண்டிருக்கையில் செல்போன்கள் பயன்படுத்துவதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டே வருகிறது. அதிலும் குறிப்பாக டேக்சி உள்ளிட்ட வாகன ஓட்டுநர்களே இவ்வாறான தவறுகளில் அதிகப்படியாக ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.



இதுபோன்ற குற்றச்சாட்டில் தற்போது சிக்கியுள்ளதே உபர் என்னும் கால்டாக்சி நிறுவனத்தின் டேக்சி ஓட்டுநர்கள். வாடிக்கையாளர்களிடம் இருந்து வரும் அழைப்புகளை தொடர்வதற்காக சாலையில் வாகனங்களை இயக்கியபடியே செல்போன்களிலும் பேசி வருகின்றனர் உபர் டேக்சி ஓட்டுநர்கள்.

தங்களது டேக்சியில் வாடிக்கையாளர்கள் பயணித்து வருவதையும், அவர்களது பாதுகாப்பு குறித்து எவ்வித அச்சமுமின்றி அடுத்து வரும் வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்குவதற்காக செல்போன்களில் உரையாடியபடியே வாகனங்களையும் இயக்குகின்றனர்.



அதுபோன்றே கடந்த சனிக்கிழமையன்று உபர் டேக்சி வாகன ஓட்டுநர் ஒருவர் கோவை புரூக் பான்டு சாலை மேம்பாலத்தில், போக்குவரத்து நெரிசலான நேரத்தில் செல்போனில் பேசியபடியே தனது டேக்சி வாகனத்தையும் இயக்கினார்.

இதுபோன்ற சம்பவங்கள், டேக்சி ஓட்டுநர்களுக்கு மட்டும் போக்குவரத்து விதிமுறைகளில் தளர்வு ஏதேனும் உள்ளதா என்ற கேள்வியினை மக்கள் மத்தியில் எழுப்புகிறது. இதுபோன்ற டேக்சி ஓட்டுநர்கள் தொடர்ந்து செல்போன்களில் பேசியபடியும், ஜிபிஎஸ் உள்ளிட்ட செயலிகளை இயக்கியபடியுமே வாகனங்களை ஓட்டுவது இதர வாகன ஓட்டிகளில் உயிர்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தாதா என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. உபர் உள்ளிட்ட டேக்சி நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கும், ஓட்டுநர்களுக்கும் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள உத்தரவாதம் கொடுக்க வேண்டும்.

கோவை நகர போக்குவரத்து காவல்துறை இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் வாகன ஓட்டுநர்களுக்கு தகுந்த விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும். மேலும், இதுபோன்ற சாலை பாதுகாப்பு விதிகளை மீறுவோர் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொண்டு அபராதம் உள்ளிட்ட தண்டனைகளும் வழங்க வேண்டும் என இதர வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...