கோவையில் கைது செய்யப்பட்ட மாவோய்ஸ்ட்டுகளின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

கோவையில் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட்டுகள் 5 பேரின் நீதிமன்ற காவலை மார்ச் 7ம் தேதி வரை நீடித்து கோவை மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி பொங்கியப்பன் உத்திரவிட்டார்.

கோவை கருமத்தம்பட்டி பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு கைது செய்யப்பட்ட ரூபேஷ், சைனா, வீரமணி, அனூப், கண்ணன் ஆகிய 5 மாவோயிஸ்ட்டுகள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அரசுக்கு எதிராக சதிதிட்டம் தீட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கில் மாவோயிஸ்ட்டுகள் 5 பேரும் இன்று கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

நீதிமன்றத்திற்கு ஆஜராக வந்த ஐந்து பேரும் சட்டமன்றம், நாடாளுமன்றங்களை விமர்சனம் செய்து முழக்கங்களை எழுப்பினர்.

பின்னர் வழக்கு விசாரணையின் போது, மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்ட போது அவர்களுக்கு எதிராக சேகரிக்கப்பட்ட ஆவணங்கள் இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இருப்பதாகவும், அவற்றை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தரவேண்டும் எனவும் மாவோயிஸ்டுகளின் வழக்கறிஞரான பாலமுருகன் கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து வழக்கை வருகிற மார்ச் 7ம் தேதிக்கு ஒத்திவைத்து மாவட்ட முதன்மை நீதிபதி பொங்கியப்பன் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து, சைனா, வீரமணி, அனூப், கண்ணன் ஆகிய 4 பேரை மீண்டும் கோவை மத்திய சிறைக்கும், ரூபேஸ் என்ற மாவோயிஸ்ட்டை கேரள சிறைக்கும் காவல் துறையினர் அழைத்துச் சென்றனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...