வரும் டிசம்பர் 7 மற்றும் 8ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள இந்த பயிற்சியில், முருங்கையில் இருந்து முருங்கை பொடி, பிஸ்கட், அடை மிக்ஸ், ஊறுகாய் மற்றும் காளானில் இருந்து பொடி, கப் மிக்ஸ், பிஸ்கட், ஊறுகாய் ஆகியவை தயாரிக்கும் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வரும் டிசம்பர் 7 மற்றும் 8ஆம் தேதிகளில் காளான் மற்றும் முருங்கையில் இருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
வரும் 07.12.2022 மற்றும் 08.12.2022 ஆகிய 2 நாட்களும்பயிற்சி வழங்கப்பட உள்ளன. இந்த பயிற்சியின் போது, முருங்கையில் இருந்து முருங்கை பொடி, பருப்பு பொடி, சாம்பார் பொடி, பிஸ்கட், அடை மிக்ஸ், ஊறுகாய், நூடுல்ஸ் ஆகிய மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சிகள் வழங்கப்படும்.
இதேபோல், காளானில் இருந்து காளான் பொடி, கப் மிக்ஸ், பிஸ்கட், ஊறுகாய், பிழிதல் தொழில் நுட்பம் ஆகியவை குறித்த பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
இந்த பயிற்சியில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் பயிற்சிக்கான கட்டணமாகரூ.1,770/- (ரூ.1500 4 051 186) பயிற்சியின் முதல் நாளன்று செலுத்த வேண்டும்.
பயிற்சி நடைபெறும் இடம்:
அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம்,
வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
கோயம்புத்தூர் - 647 003.
பேருந்து நிறுத்தம்: வாயில் எண்.7, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், மருதமலை சாலை வழியாக, கோயம்புத்தூர் - 641003
மேலும் விபரங்களுக்கு:
பேராசிரியர் மற்றும் தலைவர்,
அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம்,
வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
கோயம்புத்தூர் - 647 003.
என்ற முகவரியிலும்,
9488518268 என்ற தொலை பேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.