உடுமலையில் தக்காளி விலை தொடர் சரிவு - அரசே கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை!

தக்காளி விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், விலை அதிகமாக இருந்த போது நியாய விலை கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டது போல் தற்போது, குறைந்த பட்ச ஆதார விலையாக கிலோ ரூ.15-க்கு அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என உடுமலை விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.



திருப்பூர்: தக்காளி விலை தொடர்ந்து சரிந்து வருவதால் அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என உடுமலை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ளது. குறிப்பாக 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி ஆண்டு முழுவதும் பயிர் செய்யப்பட்டு வருகின்றது.



இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு 14 கிலோ கொண்ட பெட்டி ரூ.2400 வரை விற்பனையானது. தற்பொழுது உடுமலை சந்தையில் வரத்து அதிகரிப்பின் காரணமாக 14 கிலோ தக்காளி பெட்டி 50க்கும் குறைவாக விற்பனையாவதால் விவசாயிகள் தாங்கள் கொண்டு வரும் தக்காளிகளுக்கு உரிய விலை கிடைக்காததால், சாலையோரத்தில் வீசிச் செல்லும் அவல நிலை அரங்கேறியது.



இதனால், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு வெளி மாநிலங்களில் இருந்து தக்காளியை விலைக்கு வாங்கி நியாய விலைக் கடைகளில் குறைந்த விலைக்கு வழங்கினார்கள்.

அதைப்போலவே விவசாயிகளிடமிருந்து ஆதார விலையாக ரூ 15 என நிர்ணயம் செய்து தக்காளியை அரச கொள்முதல் செய்து விற்பனை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை பகுதி தக்காளி விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter