கோவையில் உள்ள குமரகுரு கல்வி நிறுவனத்தில் பால்வள உற்பத்தி பற்றி பங்குதாரர் சந்திப்பு - அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்பு

கோவையில் உள்ள குமரகுரு கல்வி நிறுவனத்தில் பால்வள உற்பத்தி மற்றும் பராமரிப்பு குறித்து மாநில அளவிலான பங்குதாரர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.


கோவை: பால்வள உற்பத்தி மற்றும் பராமரிப்பு குறித்து மாநில அளவிலான பங்குதாரர் சந்திப்பு நிகழ்ச்சியில், பொருளாதாரத்திற்கு விவசாயம் மற்றும் கால்நடைத்துறையின் பங்குக்குறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் எடுத்துரைத்தார்.

குமரகுரு கல்வி நிறுவனங்களில் 17-09-2023 அன்று, தமிழ்நாடு பால்வள உற்பத்தி மற்றும் பராமரிப்பு குறித்த மாநில அளவிலான பங்குதாரர் சந்திப்பு நடைபெற்றது.



இதில் தமிழகத்தின் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள், தெற்காசியாவிற்கான சர்வதேச கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தின் மண்டலப் பிரதினிதி முனைவர். ஹபிபர் ரகுமான் அவர்கள், குமரகுரு குழுமத்தின் ஆராய்ச்சிக்கான திட்ட மேலாளர் முனைவர். தன்னம்மாள் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்பு செய்தனர்.

குமரகுரு குழுமத்தின் பொது மேலாளரும் நிர்வாக அலுவலருமான சரவணன் சந்திரசேகரன் வரவேற்புரையை வழங்கினார். தொடர்ந்து உரையாற்றிய முனைவர். ஹபிபர் ரகுமான், இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் குறித்தும், அதன் செயல்பாடுகள் மற்றும் வருங்கால திட்டங்கள் குறித்தும் விளக்கினார். அதுமட்டுமின்றி நம் நாட்டில் கால்நடைத் துறை சந்திக்கும் சவால்கள் மற்றும் அவற்றை சரிசெய்யும் முறைகள் குறித்தும் உரையாற்றினார்.

முனைவர். தன்னம்மாள் அவர்கள், தமிழகத்தில் அவர் மேற்க்கொண்ட களஆய்வு குறித்தும் தமிழகத்தில் கால்நடை வளர்ப்பு முறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும் கால்நடை தீவன முறைகள் குறித்தும் தன் கருத்துகளைப் பகிர்ந்தார்.



இறுதியாக பேசிய பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், விவசாயமும் கல்வியும் தொழிலும் எவ்வாறு ஒன்றோடொன்று பிணையப்பட்டுள்ளது என்பதை விளக்கினார்.

பொருளாதாரத்திற்கு விவசாயம் மற்றும் கால்நடைத்துறையின் பங்குக்குறித்தும் எடுத்துரைத்தார். கால்நடைத்துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்தும் அதில் முன்னெடுக்கப்பட்டு வரும் முன்னேற்றத்திட்டங்கள் குறித்தும் விவரித்தார். இதனைத் தொடர்ந்து நான்கு வெவ்வேறு தலைப்புகளில் குழு கலந்தாய்வு நடைபெற்றது. இறுதியாக கலந்தாய்வின் முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு நிகழ்வு நிறைவடைந்தது.

Newsletter