வேளாண்‌ ஏற்றுமதி பற்றி அறிய வேண்டுமா? - கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் பயிற்சி

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ உள்ள வேளாண்‌ வணிக மேம்பாட்டு இயக்ககத்தில்‌ ஒரு நாள்‌ வேளாண்‌ ஏற்றுமதி வாய்ப்புகள்‌ குறித்து பயிற்சி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: வேளாண்‌ ஏற்றுமதி வாய்ப்புகள்‌ குறித்தான பயிற்சியில்‌ உழவர்கள்‌, உழவர்‌ உற்பத்தியாளர்‌ நிறுவனங்கள்‌, பெண்கள்‌, இறுதி ஆண்டு பட்டதாரி மாணவர்கள்‌, பட்டதாரிகள்‌, இளைஞா்கள்‌ மற்றும்‌ தொழில்முனைவோர்களும்‌ பங்குபெறலாம்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ உள்ள வேளாண்‌ வணிக மேம்பாட்டு இயக்ககத்தில்‌ ஒரு நாள்‌ வேளாண்‌ ஏற்றுமதி வாய்ப்புகள்‌ குறித்து பயிற்சி வழங்கப்படுகிறது.

இப்பயிற்சியில்‌ உழவர்கள்‌, உழவர்‌ உற்பத்தியாளர்‌ நிறுவனங்கள்‌, பெண்கள்‌, இறுதி ஆண்டு பட்டதாரி மாணவர்கள்‌, பட்டதாரிகள்‌, இளைஞா்கள்‌ மற்றும்‌ தொழில்முனைவோர்களும்‌ பங்குபெறலாம்‌.

இப்பயிற்சி வேளாண்‌ வணிக மேம்பாட்டு இயக்ககத்தில்‌ 29.09.2023 அன்று நடைபெற உள்ளது. பயிற்சி கட்டணமாக நபர் ஒருவருக்கு ரூபாய்‌ 1770/- வசூலிக்கப்படுகிறது. பதிவுக்கு குறைந்த எண்ணிகையிலான இடங்களே உள்ளது. (20 நபர்கள்‌). மேலும்‌ பதிவுக்கு மின்னஞ்சல்‌ [email protected] மற்றும்‌ தொலைபேசி எண்‌: 0422 - 6611310, 99949 89417 / 9500476626 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம் என வேளாண்பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter