கோவை வேளாண் பல்கலை-யில் காளான், முருங்கையில் இருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள்‌ தயாரிக்கும்‌ 2 நாள் பயிற்சி

வரும் டிசம்பர் 7 மற்றும் 8ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள இந்த பயிற்சியில், முருங்கையில் இருந்து முருங்கை பொடி, பிஸ்கட்‌, அடை மிக்ஸ்‌, ஊறுகாய்‌ மற்றும் காளானில் இருந்து பொடி, கப்‌ மிக்ஸ்‌, பிஸ்கட்‌, ஊறுகாய் ஆகியவை தயாரிக்கும் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. ‌



கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ வரும் டிசம்பர் 7 மற்றும் 8ஆம் தேதிகளில் காளான்‌ மற்றும்‌ முருங்கையில் இருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள்‌ தயாரிக்கும்‌ பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கோவை தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ காளான்‌ மற்றும்‌ முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள்‌ தயாரிக்கும்‌ பயிற்சி வழங்கப்பட உள்ளது.

வரும் 07.12.2022 மற்றும்‌ 08.12.2022 ஆகிய 2 நாட்களும்பயிற்சி வழங்கப்பட உள்ளன‌. இந்த பயிற்சியின் போது, முருங்கையில் இருந்து முருங்கை பொடி, பருப்பு பொடி, சாம்பார்‌ பொடி, பிஸ்கட்‌, அடை மிக்ஸ்‌, ஊறுகாய்‌, நூடுல்ஸ்‌ ஆகிய மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சிகள் வழங்கப்படும்.

இதேபோல், காளானில் இருந்து காளான்‌ பொடி, கப்‌ மிக்ஸ்‌, பிஸ்கட்‌, ஊறுகாய்‌, பிழிதல்‌ தொழில்‌ நுட்பம் ஆகியவை குறித்த பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. ‌

இந்த பயிற்சியில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள்‌ பயிற்சிக்கான கட்டணமாகரூ.1,770/- (ரூ.1500 4 051 186) பயிற்சியின் முதல்‌ நாளன்று செலுத்த வேண்டும்‌.

பயிற்சி நடைபெறும்‌ இடம்:‌

அறுவடை பின்சார்‌ தொழில்நுட்ப மையம்‌,

வேளாண்மைப்‌ பொறியியல்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையம்‌, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌,

கோயம்புத்தூர்‌ - 647 003.

பேருந்து நிறுத்தம்‌: வாயில்‌ எண்‌.7, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌, மருதமலை சாலை வழியாக, கோயம்புத்தூர்‌ - 641003

மேலும்‌ விபரங்களுக்கு:

பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌,

அறுவடை பின்சார்‌ தொழில்நுட்ப மையம்‌,

வேளாண்மைப்‌ பொறியியல்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையம்‌,

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌,

கோயம்புத்தூர்‌ - 647 003.

என்ற முகவரியிலும்,

9488518268 என்ற தொலை பேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நாளை கொப்பரை ஏலம் - அதிகாரிகள் அறிவிப்பு

உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நாளை கொப்பரை ஏலம் நடைபெறும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை வேளாண்‌ பல்கலை. சார்பில் சேம்புக்கரையில் ஒருங்கிணைந்த பண்ணையத்திட்டம்‌ - பழங்குடியின, பட்டியலின மக்கள் பங்கேற்பு

தமிழ்நாடு வேளாண்‌ பல்கலைக்கழக உழவியல்‌ துறையின்‌ சார்பில் ஒருங்கிணைந்த பண்ணையத்திட்டம்‌ சேம்புக்கரை கிராமத்தில் நடைபெற்ற...

வேளாண்‌ ஏற்றுமதி பற்றி அறிய வேண்டுமா? - கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் பயிற்சி

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ உள்ள வேளாண்‌ வணிக மேம்பாட்டு இயக்ககத்தில்‌ ஒரு நாள்‌ வேளாண்‌ ஏற்ற...

கோவையில் உள்ள குமரகுரு கல்வி நிறுவனத்தில் பால்வள உற்பத்தி பற்றி பங்குதாரர் சந்திப்பு - அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்பு

கோவையில் உள்ள குமரகுரு கல்வி நிறுவனத்தில் பால்வள உற்பத்தி மற்றும் பராமரிப்பு குறித்து மாநில அளவிலான பங்குதாரர் சந்திப்பு...

நஷ்டம் ஏற்படாதவாறு பயிர்களை விவசாயிகள் விளைவிக்க வேண்டும் - கோவை வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் அறிவுரை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம் மற்றும் இந்திய வேளாண் சந்தைப்படு...

உடுமலையில் தக்காளி விலை தொடர் சரிவு - அரசே கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை!

தக்காளி விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், விலை அதிகமாக இருந்த போது நியாய விலை கடைகளில் தக்காளி வ...