கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தாவரவியல் பூங்கா புதுப்பிக்கப்பட்டு இன்று முதல் மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறப்பு!

கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தாவரவியல் பூங்கா புதுப்பிக்கப்பட்டு இன்று முதல் மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.


கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தாவரவியல் பூங்கா புதுப்பிக்கப்பட்டு இன்று முதல் மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.



இந்த நிகழ்ச்சியில் கோவை பாரத வித்யா பவனின் தலைவர் டாக்டர் பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தாவரவியல் பூங்காவை திறந்து வைத்தார்.



திறப்பு விழாவில் பேசிய தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர், ஓராண்டு காலமாக செயல்படாமல் இருந்த தாவரவியல் பூங்கா தற்போது புதுப்பிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.



மேலும், உலகில் உள்ள தலைசிறந்த தாவரவியல் பூங்காக்களில் ஒன்றாக நமது பல்கலைக்கழக பூங்காவை மாற்ற வேண்டும் என்பது தனது கனவு என்றும், மாணவர்கள் ஐரோப்பாவில் உள்ள பல ஆயிரம் தாவர‌ வகைகள் உள்ள தாவரவியல் பூங்காவை தங்களது வாழ்நாளில் ஒருமுறையாவது பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

பின்னர், தாவரவியல் பூங்காவின் பார்வை நேரம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இரவு 8 மணி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாகவும், காலையில் முதியவர்களுக்கான நடைபயிற்சிக்காக 7 மணி அளவிலேயே திறக்க முடிவு செய்துள்ளதாகவும், பொது மக்களுக்காக சிற்றுண்டி அங்காடியும் அமைக்க உள்ளதாக தெரிவித்தார்.



அதனை தொடர்ந்து பேசிய பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயர், தன்னை சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பேசுமாறு அழைத்ததாகவும், அது குறித்து மானவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும் பல்கலைக்கழகத்தின் சார்பில் கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார்.

நூறு ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுச்சூழலை பாதுகாப்பது என்பது முக்கியமான ஒன்றாக இருக்கவில்லை. ஆனால், தற்பொழுது நம் சுற்றுச்சூழலை பாதுகாக்க கடுமையாக போராடிக் கொண்டிருக்கும் நிலைக்கு காரணம் தொழில்நுட்பங்களை சரியாக கையாளாதது தான் என்று கூறினார்.

மேலும், அறிவியலை துணையாக கொண்டு நாம் இயற்கை வளங்களை காக்க வேண்டும் எனவும் மாணவர்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்க தங்களால் இயன்ற செயல்களில் ஈடுபட வேண்டும் என்று தெரிவித்தார்.

Newsletter