ஆராய்ச்சி படிப்புகளை வலுப்படுத்த கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகம் புதிய ஒப்பந்தம்

கோவை தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌ மற்றும்‌ அமிர்தா விஸ்வ வித்ய பீடம் ஆகியவற்றுக்கு இடையே உணவு விநியோகச்‌ சங்கிலியில்‌ தர பகுப்பாய்வு செய்வது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.


கோவை: ஆராய்ச்சி படிப்புகளை மேம்படுத்த கோவை வேளாண் பல்கலைகழகம் அடுத்தடுத்த முயற்சிகளை எடுத்துள்ளது

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக துணைவேந்தர்‌ முனைவர்‌ கீதாலட்சுமி அமிர்தா விஸ்வ வித்ய பீட முதன்மை இயக்குநர்‌ (கார்ப்பரேட்‌ மற்றும்‌ தொழில்துறை உறவு) பேராசிரியர்‌ சி.பரமேஸவரன்‌, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக பதிவாளர்‌, முனைவர்‌ இரா.தமிழ்வேந்தன்‌, வேளாண் பொறியியல்‌ கல்லூரியின்‌ முதன்மையர்‌ முனைவர்‌ அ.ரவிராஜ்‌ மற்றும்‌ உணவு பதன செய்‌ பொறியியில் துறைத்‌ தலைவர்‌ மற்றும்‌ பேராசிரியர்‌ முனைவர்‌ எம்‌. பாலகிருஷ்ணன்‌ முன்னிலையில்‌ இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

உணவு விநியோகச்‌ சங்கிலியில்‌ தர பகுப்பாய்வு - சிக்ஸ்‌ சிக்மாவுக்கான செயல்முறை திறன்‌ பகுப்பாய்வு, வேளாண்மைக்கான பிளாக்‌ செயின்‌ - உணவுத்‌ தடமறிதல, செயற்கை நுண்ணறிவு(AI) மற்றும்‌ இயந்திர கற்றல்(ML)‌ ஆகியவற்றைப்‌ பயனபடுத்தி உணவுத்‌ தரச்‌ சரிபார்ப்பு போன்ற துறைகளில்‌ கூட்டு ஆராய்ச்சி மற்றும்‌ மேம்பாட்டிற்காக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம்‌ செயயப்பட்டது.

மேலும் வெப்ப பரிமாற்ற மாதிரிகள்‌ மேம்பாடு, உணவு மூலம்‌ பரவும்‌ நோயக்கிருமிகளுக்கான ஹைப்பா்‌ ஸ்பெக்ட்ரல்‌ இூமஜிங் மற்றும்‌ பல்வேறு ஆராயச்சி வசதிகளை வலுப்படுத்துவதில்‌ இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம்‌ உதவும்‌ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...