கோவை வேளாண் பல்கலை. - ஆஸ்தி. சிட்னி பல்கலை. இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்‌

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம் மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள மேற்கு சிட்னி பல்கலைக்கழகம் இடையே ஆராய்ச்சி படிப்புகளை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.


கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப்‌ பலகலைக்கழகம்‌, ஆஸ்திரேலியாவின்‌ மேற்கு சிட்னி பல்கலைக்கழகம்‌ இடையே பெங்களூருவில்‌ முதுகலை மாணவர்களினர்‌ ஆராய்ச்சியை எளிதாக்குவதறகான புரிந்துணாவு ஒப்பந்தம்‌ கையெழுத்தானது.

இதன் முலம் இருவேறு நிறுவனங்களுக்கிடையே கல்வி மற்றும்‌ ஆராய்ச்சி ஒத்துழைப்பை வளர்ப்பது, மாணவ பரிமாற்றத்‌ திட்டத்தின்‌ மூலம்‌ முதுகலை மாணவர்கள்‌ பரிமாற்றத்தைத்‌ தொடங்குவது போன்ற அம்சங்கள் குறித்து கூட்டாக ஒப்புந்தம் செய்யபபட்டன.

இதில்‌ பங்கு பெறும்‌ மாணவர்கள்‌ தங்கள்‌ பட்டப்படிப்பின் ஒரு பகுதியை ஒரு பல்கலைக்கழகத்திலும்‌ மற்றொரு பகுதியை மற்றும்‌ ஒரு பல்கலைக்கழகத்திலும்‌ முடிக்க வேண்டும்‌ முடிவு செய்யப்பட்டது.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர்‌ முனைவர்‌ வெ.க தாலட்சுமி மற்றும்‌ ஆஸ்திரேலியாவின்‌ மேற்கு சிட்னி பல்கலைக்கழகத்தின்‌ இணை துணைவேந்தர்‌ பேராசிரியர்‌ டெபோரா ஸ்வீனி ஆகிய இருவரும் மேற்கு சிட்னி பலகலைக்கழகத்தின்‌ சார்‌ துணை வேந்தர்‌ பேராசிரியர்‌ லிண்டா டெய்லர்‌ முன்னிலையில்‌ மாணவர்களின்‌ நலனுக்கான ஒப்பந்தத்தில்‌ கையெழுத்திட்டனர்‌.

இதன் பின்னர்‌, இந்த கல்வி ஒத்துழைப்பின்‌ இன்றியமையாமை மறறும்‌ முன்னோக்கி செல்லும்‌ வழிகள்‌ பற்றி இருவரும் எடுத்துரைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பெங்களூரு வேளாண் அறிவியல்‌ பல்கலைக்கழக துணைவேந்தர்‌ முனைவர்‌ எஸ்‌.வி.சுரேஷ்‌, கேரள வேளான்‌ பல்கலைக்கழக பதிவாளர்‌ முனைவர்‌ ஏ.சாகர்‌ உசேன்‌, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முதுகலை பட்ட மேற்படிப்பு பயிலக முதன்மையர்‌ முனைவர்‌ ந.செந்தில் மேற்கு சிட்னி பல்கலைக்கழக மூத்த ஆலோசகர்‌ (ஆராய்ச்சி வியூகம்‌ மற்றும்‌ கூட்டாண்மை) முனைவர்‌ நிஷிராகேஷ்‌ மற்றும்‌ பிறதரப்புகளின்‌ பிரதிநிதிகளும்‌ கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்‌.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...