உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கில் பாலியல் வன்கொடுமையில் இருந்து காத்து கொள்வதும், தடுப்பதும் குறித்து எடுத்துரைக்கப்பட்டன.


திருப்பூர்: உடுமலையில் நடைபெற்ற பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள முக்கோணம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் போதை பொருள் தடுப்பு பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.



பள்ளி தலைமை ஆசிரியை உமா மகேஸ்வரி தலைமை தாங்கினார் பூலாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சரவணன் வரவேற்புரை ஆற்றினார்.



உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறை துணை ஆய்வாளர் காளிஸ்வரி பெண் குழந்தைகள் பாலியல் சிக்கல்களில் இருந்து தப்பிப்பது எப்படி என்பது குறித்தும் ஆபத்து நேரத்தில் 181 மற்றும் 1098 எண்களை தொடர்பு கொள்ள வேண்டிய முறைகள் பற்றியும் எடுத்துரைத்தார்.



மாணவ மாணவிகள் குளிப புகையிலை பான்பராக் போன்ற பொருள்களை பயன்படுத்தக் கூடாது அதை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவ மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்.

உதவி ஆசிரியர் இந்திரா தேவி நன்றி உரை ஆற்றினார்

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...