கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் தமிழ் கனவு நிகழ்ச்சி - முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு பங்கேற்பு

கோவையில் உள்ள தமிழ்நாடு பல்கலைகழகத்தில் நடைபெற்ற தமிழ் கனவு நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளாராக கலந்து கொண்ட முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு மாணவர்களிடம் உரை நிகழ்த்தினார்.


கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில் மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி பல்கலைகழக வளாகத்தில் நடைபெற்றது.



இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டார் "எனக்குள் ஒரு தலைவன்" என்ற பொருண்மையில் கல்லூரி மாணவர்களிடையே அவர் கலந்துரையாடினார்.



இந்நிகழ்ச்சியில் தமிழின் பண்பாடு, கலைச் சிறப்புகள், தமிழரின் தொன்மை, தமிழரின் வணிகம், மாணவர்களின் எதிர்கால திட்டமிடல் போன்ற பல்வேறு தலைப்புகள் கலந்துரையாடப்பட்டன.

முன்னதாக அங்கு அமைக்கப்பட்டிருந்த கைவினைப் பொருட்கள் சிறுதானிய உணவு கண்காட்சிகளை சைலேந்திர பாபு பார்வையிட்டார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் பல்வேறு தனியார் வங்கி நிறுவனங்கள் பங்கேற்று தொழில் கடன், தொழில் முனைவோர் குறித்தான பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.



இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திக்குமார் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...