கோவையில் வேளாண் பல்கலைக்கழகத்தில் தேசிய பயிலரங்கம் -  'வேளாண்மை பருவநிலை மாற்றம்,உரக்‌ கொள்கை' குறித்து விவாதம்

கோவை வேளாண்மைப்‌ பல்கலைக்கழக வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம்‌ மற்றும்‌ இந்திய உரக்‌ கழகம்‌ இணைந்து, "வேளாண்மை மீதான பருவநிலை மாற்றத்தின்‌ தாக்கம்‌ - உரக்‌ கொள்கையின்‌ பங்கு" என்ற தேசியப்‌ பயிலரங்கம் நடைபெற்றது.


கோவை: கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் செப்டம்பர்‌ 21 ஆம்‌ தேதி தேசிய பயிலரங்கம் நடைபெற்றது. இதில் வேளாண்மை மீதான பருவநிலை மாற்றத்தின்‌ தாக்கம்‌ - உரக்‌ கொள்கையின்‌ பங்கு"என்ற தலைப்பில் என்றநடத்தப்பட்டது.

இந்த தேசிய பயிலரங்கில்‌ பயிர்‌ மேலாண்மை இயக்ககத்தின்‌ இயக்குனர்‌ முனைவர்‌ மு.க.கலாராணி வரவேற்புரையாற்றினார்‌. அதில் "இந்தியாவில்‌ உரங்களுக்கும்‌ விவசாயிகளுக்கும்‌ இடையே உள்ள பிரிக்க முடியாத உறவை வலியுறுத்தும்‌ வகையில்‌ இந்த அரங்கம்‌ திட்டமிடப்பட்டுள்ளது. வேளாண்‌ துறையில்‌ தன்நிறைவு அடைவதற்கு காலநிலைக்கு ஏற்ப வேளாண்மை நடைமுறைகளின்‌ அவசியத்தையும்‌, தாவரங்களில்‌ ஊட்டச்சத்து ஒருங்கிணைப்பில்‌ காலநிலை மாற்றம்‌ எவ்வாறு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை பற்றியும்‌ விஞ்ஞானிகள்‌ கலந்துரையாடல்‌ நடைபெற உள்ளது" இவ்வாறு அவர் பேசினார்

பின்னர் இந்திய உரக்‌ கழக மண்டலத்‌ தலைவர்‌, Y.V.N. மூர்த்தி பேசுகையில்,உணவுப்‌ பாதுகாப்பின்‌ முக்கியத்துவத்தையும்‌, உர விலையில்‌ ஏற்படும்‌ ஏற்ற இறக்கத்தை குறித்தும்‌ தெளிவாக விளக்கினார். இந்தியாவில்‌ உள்ள பல்வேறு திட்டங்கள்‌ மற்றும்‌ பணிகளைப்‌ பற்றியும்‌ அவர் வலியுறுத்தினார்‌. "நாம்‌ அடைந்த பெருமைகளை நினைத்து தூங்கக்கூடாது, மாறாக உரக்‌ கொள்கையை நிலைநிறுத்துவதறகான பல்வேறு சீர்திருத்தங்களைக்‌ கவனிக்க வேணடும்‌'' என்று அவர்‌ மேற்கோள்‌ காட்டினார்‌.

இதே போல் இயற்கை வள மேலாண்மை இயக்ககத்தின்‌ இயக்குனர்‌ முனைவர்‌ ப.பாலசுப்ரமணியம்‌ பேசும் போது,கரிம, கனிம மற்றும்‌ உயிர்‌ உரங்கள்‌ மூலம்‌ சமச்சீர்‌ உரங்களைப்‌ பயன்படுத்துவதன்‌ முக்கியத்துவம்‌ குறித்து எடுத்துரைத்தார்

விவசாயிகளின்‌ வருமானத்தைப்‌ பாதிக்காத வகையில்‌ நஞ்சற்ற உணவு மற்றும்‌ வளிமண்டலத்தை அடைவதற்கு நானோ உரம்‌ மற்றும்‌ நீரில்‌ கரையும்‌ உரங்களின்‌ முக்கியத்துவத்தையும்‌ அவர்‌ அடிக்கோடிட்டுக்‌ காட்டினார்‌.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பதிவாளர்‌ முனைவர்‌ இரா. தமிழ்வேந்தன்‌ பேசுகையில் காலநிலை மாற்றத்தின்‌ முக்கியத்துவம்‌ குறித்து விளக்கினார் சமீபத்திய IPCC அறிக்கையை மேற்கோள்‌ காட்டி, 2030 ஆம்‌ ஆண்டுக்குள்‌ காற்றின்‌ வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ்‌ அதிகரிக்கும்‌.விவசாய சமூகங்களின்‌ நலனுக்கான வேளாண்‌ காலநிலை ஆராய்ச்சி மையம்‌ வழங்கும்‌ வானிலை முன்னறிவிப்பு, வானிலை அடிப்படையிலான விவசாய ஆலோசனைகள்‌ சேவைகள்பற்றியும்‌ மேற்கோள் காட்டி உரை நிகழத்தினார்.

வேளாண்காலநிலை ஆராய்ச்சி மைய பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌ முனைவர்‌ என்‌.கே.சத்தியமூர்த்தியின்நனறியுரையுடன்‌ நிகழ்ச்சி நிறைவுற்றது.

இந்த அரங்கில்‌ 38 தொழில்துறையினர்‌, 31 விஞ்ஞானிகள்‌ மற்றும்‌ பல்வேறு துறைகளைச்‌ சேர்ந்த 30 மாணவர்கள்‌ பங்கேற்றனர்‌.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...