வேளார்‌ மற்றும்‌ விதை நுட்பத்‌ துறையில்‌ இந்திய விதைத்‌ தொழில்‌ கூட்டமைப்பு உடன் வேளாண்மைப் பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஆசியா மற்றும்‌ பசிபிக்‌ விதை கூட்டணி லிமிடெட்‌, பாங்காக்‌ ஆகியவற்றுக்கு இடையே 19.09.2023 அன்று பல்கலைக்கழக இணைப்புத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ ஆசிய பசிபிக்‌ பிராந்தியத்தில்‌ வேளார்‌ மற்றும்‌ விதை நுட்பத்‌ துறையில்‌ மாணவர்களின்‌ திறன்கள்‌ மற்றும்‌ அறிவை மேம்படுத்தவும்‌, வலை வாய்ப்பை ஏற்படுத்தவும்‌ புரிந்துணர்வு ஒப்பந்தம்‌ கையெழுத்தானது.


கோவை: ஆசியா மற்றும்‌ பசிபிக்‌ விதை கூட்டணியின்‌ தொழில்நுட்ப ஆலோசகர்‌ முனைவர்‌.ஷிவேந்திரபஜாஜ்‌, தமிழ்நாடு வேளாண்‌ பல்கலைக்கழக மாணவர்களின்‌ திறனை உலகளாவிய தரத்திற்கு உயர்த்துவதற்கும்‌, விதை நிறுவனங்களின்‌ தேவைக்கேற்ப ஆராய்ச்சியை மேற்கொள்ளவும்‌ உரையாற்றினார்.

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌, கோயம்புத்தூர்‌, இந்திய விதைத்‌ தொழில்‌ கூட்டமைப்பு, புதுடெல்லி, இந்தியா மற்றும்‌ ஆசியா மற்றும்‌ பசிபிக்‌ விதை கூட்டணி லிமிடெட்‌, பாங்காக்‌ ஆகியவற்றுக்கு இடையே 19.09.2023 அன்று பல்கலைக்கழக இணைப்புத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ ஆசிய பசிபிக்‌ பிராந்தியத்தில்‌ வேளார்‌ மற்றும்‌ விதை நுட்பத்‌ துறையில்‌ மாணவர்களின்‌ திறன்கள்‌ மற்றும்‌ அறிவை மேம்படுத்தவும்‌, வலை வாய்ப்பை ஏற்படுத்தவும்‌ புரிந்துணர்வு ஒப்பந்தம்‌ கையெழுத்தானது.

முனைவர்‌. வெ.கீதாலட்சுமி, துணைவேந்தர்‌, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌, முனைவர்‌. மணாஷ்குமார்‌, ஆசியா மற்றும்‌ பசிபிக்‌ விதை கூட்டணியின்‌ தலைவர்‌ மற்றும்‌ ராகவன்‌ சம்பத்குமார்‌, நிர்வாக இயக்குநர்‌, இந்திய விதைத்‌ தொழில்‌ கூட்டமைப்பு, புதுடெல்லி ஆகியோர்‌ வேளாண்மையில்‌ ஆராய்ச்சி மற்றும்‌ கல்விசார்‌ ஒத்துழைப்பை நலகவும்‌ தொழில்‌ நிறுவனங்களில்‌ தேவைக்கேற்ற ஆராய்ச்சியை மேற்கொள்ளவும்‌ புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்‌ கையெழுத்திட்டனர்‌.

ஆசியா மற்றும்‌ பசிபிக்‌ விதை கூட்டணியின்‌ தொழில்நுட்ப ஆலோசகர்‌ முனைவர்‌.ஷிவேந்திர பஜாஜ்‌, தமிழ்நாடு வேளாண்‌ பல்கலைக்கழக மாணவர்களின்‌ திறனை உலகளாவிய தரத்திற்கு உயர்த்துவதற்கும்‌, விதை நிறுவனங்களின்‌ தேவைக்கேற்ப ஆராய்ச்சியை மேற்கொள்ளவும்‌ மற்றும்‌ பல்கலைக்கழக இணைப்புத்‌ திட்டத்தின்‌ முக்கியத்துவம்‌ குறித்தும்‌ உரையாற்றினார்‌.



ஆசியா மற்றும்‌ பசிபிக்‌ விதை கூட்டணியின்‌ நிர்வாக உறுப்பினர்கள்‌ இதில்‌ கலந்து கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்‌ கையெழுத்திடும்‌ இணைய வழி நிகழ்வை ஒருங்கிணைத்தனர்‌.



பல்கலைக்கழக பதிவாளர்‌ (முனைவர்‌.இர.தமிழ்வேந்தன்‌, முனைவர்‌. ந.செந்தில்‌, முதன்மையர்‌ (முதுகலை பட்டப்படிப்பு முனைவர்‌.இரா.உமாராணி, இயக்குநர்‌ விதை மையம்‌ மற்றும்‌ முனைவர்‌.வே.மனோன்மணி, பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌, விதை அறிவியல்‌ மற்றும்‌ தொழில்நுட்பத்‌ துறை மற்றும்‌ பிற விதை நுட்ப பேராசிரியர்கள்‌ இந்நிகழ்வில்‌ கலந்து கொண்டனர்‌.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...