உடுமலை கால்நடை மருத்துவ கல்லுாரியில் முத்தமிழ் விழா கொண்டாட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், தமிழ் மன்றம் சார்பில், 'அமரா நதி' என்ற தலைப்பில், முத்தமிழ் விழா நடைபெற்றது.


திருப்பூர்: முத்தமிழ் விழாவில் தமிழகத்தில் கண்டறியப்பட்ட தொல்லியல் பொருட்கள் மற்றும் கால்நடை பாதுகாப்பு குறித்த புத்தகங்களை உள்ளடக்கிய கண்காட்சி நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், தமிழ் மன்றம் சார்பில், 'அமரா நதி' என்ற தலைப்பில், முத்தமிழ் விழா நடந்தது.



விழாவுக்கு, கால்நடை மருத்துவக்கல்லுாரி முதல்வர் குமாரவேல் தலைமை வகித்தார். தமிழ் மன்ற மாணவ செயலாளர் அஜய் வரவேற்றார்.



பொள்ளாச்சி ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லுாரி தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் ராம்கணேஷ், 'அமரா நதி-2023' என்ற இதழை வெளியிட்டு, போட்டிகளில், வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகளை வழங்கினார்.



பொள்ளாச்சி கம்பன் கலை மன்ற துணைத் தலைவர் ரமேஷ் சென்னியப்பன் தலைமையில், பட்டிமன்றம் நடந்தது. தமிழ் மன்ற அமைப்பாளர் கிருஷ்ணகுமார், மன்ற அறிக்கையை வாசித்தார். மழை-உடுமலை அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தமிழ் மன்ற மாணவ துணைச்செயலாளர் பிருந் தாஷிவானி நன்றி தெரிவித்தார்.



முன்னதாக, தமிழகத்தில் கண்டறியப்பட்ட தொல்லியல் பொருட்கள் மற்றும் கால்நடை பாதுகாப்பு குறித்த புத்தகங்களை உள்ளடக்கிய கண்காட்சி நடந்தது.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...